நவம்பர் 26: 1832
நியூயார்க் நகரில் ஜான் மேலன் என்பவரால் ட்ராம் வண்டி அறிமுகப்படுத்தப்பட்டது.
நவம்பர் 26: 1947
சுதந்தர இந்தியாவின் முதல் பட்ஜெட் நிதி அமைச்சர் ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரால் சமர்ப்பிக்கப்பட்டது.
நவம்பர் 26: 1954
தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த நாள்.
தமிழர்களின் தலைவர் என்று கருதப்பட்ட போதும் அதிகாரப் போட்டியின் காரணமாக சக தமிழ்ப் போராளிகளைக் கொன்ற பழிக்கு ஆளானார்.
முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் திட்டமிட்ட படுகொலைக்குப் பிறகு இந்தியாவில் இவரது இயக்கம் பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்டது. இந்தக் கொலைக்குற்றத்தில் தேடப்படும் குற்றவாளியாக இருந்தபோது 2009 மே மாதம் 17 ஆம் தேதி இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டார். அந்த மாதமே அவரது குடும்பத்தில் அனைவரும் இறந்துவிட்டதாகவும் விடுதலைப்புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டதாகவும் இலங்கை அரசு அறிவித்தது.
நவம்பர் 26: 1965
இந்தி ஆட்சி மொழியானது.
Comments
Post a Comment
Your feedback