பணம் இருக்கும் மனிதனிடம் மனம் இருப்பதில்லை. மனம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை என்பார்கள்.
அதையெல்லாம் பொய்யாக்கும் வகையில் சில அபூர்வமான மனிதர்கள் தோன்றுவதுண்டு.
அப்படி ஒரு பெரிய மனிதர் அழகப்ப செட்டியார்.
காரைக்குடி, சிவகங்கை மக்கள் செய்த தவம் அவர் அந்த மண்ணில் பிறந்தது.
அந்தக் காலத்திலேயே பெரும் தொழிலதிபர் அவர். அவருடைய தேயிலைத் தோட்டங்கள் கேரளா, கல்கத்தா, பம்பாய், மலேசியா, பர்மா என விரிந்துகிடந்தன.
துணி ஆலைகள், உணவு விடுதிகள், திரையரங்குகள், ஈயச் சுரங்கங்கள், ஆயுள் காப்பீட்டு நிறுவனம், விமானப் போக்குவரத்து நிறுவனம் என எல்லாத் துறையிலும் அவர் கொடி கட்டிப் பறந்தார்.
தேசிய ஆராய்ச்சி நிறுவனம் தொடங்குவதற்கு காரைக்குடியில் நிலத்தை நன்கொடையாக வழங்கியவர்.
பரந்து விரிந்திருக்கும் அழகப்பா பல்கலைக்கழகம் இவர் தந்த கொடையால் உருவானது தான்.
செல்வம் சேர்ப்பதே தன்னை நம்பி இருப்பவர்களை வாழவைக்கவும் தன் மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்கவும் தான் என்று ஒரு அறவாழ்வை அமைத்துக்கொண்டு அதன்படி வாழ்ந்த வள்ளல் அவர்.
சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் 1909ஆம் ஆண்டு பிறந்தார். 48 ஆண்டுகள் தான் இந்த மண்ணில் இருந்தார்.
அவர் பிறந்த நாள் ஏப்ரல் 6.
மண்ணில் 48 ஆண்டுகள் தான் என்றாலும் மக்களின் மனங்களில் என்றும் வாழ்பவர் அவர்.
Comments
Post a Comment
Your feedback