இது ஒரு வித்தியாசமான பாட்டு.
பூநக்கி ஆறுகால்; புள்இனத்துக்கு ஒன்பதுகால்;
ஆனைக்கு கால் பதினேழ் ஆனதே; மானே! கேள்!
முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு;
கண்டதுண்டு; கேட்டதில்லை காண்!
(தனிப்பாடல்)
பூநக்கி என்றால் பூனைக்கு என்பது தான் பிழையாக வந்திருக்குமோ? அப்படி பூனையைக் குறித்தால் பூனைக்கு நான்கு கால் மட்டும் தானே, ஆறு காலுக்கு எங்கே போவது?
பூநக்கி என்பது பூவை நக்கித் தேனை உறிஞ்சும் தேனீ. அதாவது தேனீக்களுக்கு ஆறுகால் என்பது தான் செய்தி. ஆக ஒரு குழப்பம் தீர்ந்தது.
அடுத்தது புள்இனத்துக்கு ஒன்பது கால். புள் என்றால் பறவை. எந்தப் பறவைக்கும் ஒன்பது கால் இல்லையே. எல்லாப் பறவைகளுக்கும் இரண்டு கால் தானே.
அதைத் தான் பாட்டு சொல்கிறது. பறவைக்கெல்லம் இரண்டே கால்.
எப்படி?
புள்இனத்துக்கு ஒன்பது கால்.
அதாவது 9 x (1/4)=2 1/4 அதாவது இரண்டே கால்.
அடுத்த சிக்கல் தீர்ந்தது.
ஆனைக்கு கால் பதினேழ் எப்படி ஆகும்?
17x(1/4) =4 1/4 அதாவது நாலே கால்.
யானைக்கு நாலே கால்.
மானே என்பது பெண்ணே என்று அழைக்க!
முண்டகம் என்பது தாமரை மலர்.
தாமரை மலரின் செம்மை நிறத்தில் குவளை மலரின் நீல நிறத்தின் சாயல் இருக்கும். அதை நாம் பார்த்துத் தான் அறிந்து கொள்ளமுடியும். அதெல்லாம் பட்டறிவு. படித்து வருவதல்ல. பிறர் சொல்லிக் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாதது.
எப்படியெல்லாம் யோசிச்சிருக்காங்க!
Comments
Post a Comment
Your feedback