ஒளவையார் குப்பம் என்ற தன் ஊர்ப்பெயரை தன் பேரோடு சேர்த்துவைத்துக்கொண்டதால் ஒளவை.சு.துரைசாமிப் பிள்ளை என்றே எல்லோராலும் அறியப்பட்டவர் அவர்.
தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள ஒளவையார் குப்பம் என்னும் சிற்றூரில் 1902 செட்டம்பர் 5 ல் பிறந்தார்.
வேங்கடசாமி நாட்டாரிடத்தும் கரந்தைக் கவியரசரிடத்தும் தமிழ் பயின்றார். வட ஆர்க்காடு மாவட்டம் காவேரிப்பாக்கம், செங்கம். சேயாறு. போளூர் உயர் நிலைப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். கரந்தைத் தமிழ்ச்சங்கப் பள்ளியில், தமிழ்வேள் உமாமகேசுவரனால் ஆசிரியராகப் பணியமர்த்தப்பட்டார். ஆசிரியப்பணி புரிந்து கொண்டே, தமிழ்ப்பாடம் பயின்று சென்னைப் பல்கலைக்கழக "வித்துவான்" தேர்வில் வெற்றி பெற்றார்.
திருப்பதி திருவேங்கடவன் கீழ்திசைக் கல்லூரியில் பேராசிரியர்,
அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் ஆய்வுத்துறை விரிவுரையாளர், மதுரை தியாகராயர் கல்லூரியில் பேராசிரியர்
என அவர் பல ஆண்டுகள் பணியாற்றி1968-இல் ஓய்வு பெற்றார்.
1981ஆம்
ஆண்டு ஏப்ரல் 3ஆம் நாள் காலமானார்.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த ஒளவைநடராஜன் இவர் மகன் தான்.
அவர் எழுதிய நூல்கள் :
ஐங்குறுநூறு உரை
ஒளவைத் தமிழ்
சிலப்பதிகார ஆராய்ச்சி
சிலப்பதிகாரச் சுருக்கம்
சிவஞானபோதச் செம்பொருள்
சீவக சிந்தாமணி ஆராய்ச்சி
சீவக சிந்தாமணிச் சுருக்கம்
சூளாமணி
சைவ இலக்கிய வரலாறு
திருமாற்பேற்றுத் திருப்பதிக உரை
திருவருட்பா மூலமும் உரையும்
தெய்வப்புலவர் திருவள்ளுவர்
நந்தாவிளக்கு
நற்றிணை உரை
பதிற்றுப்பத்து உரை
பரணர்
புதுநெறித் தமிழ் இலக்கணம்
புறநானூறு மூலமும் உரையும்
மணிமேகலை ஆராய்ச்சி
மணிமேகலைச் சுருக்கம்
மத்த விலாசம்(மொழிபெயர்ப்பு)
யசோதர காவியம் மூலமும் உரையும்
Introduction to the Study of Thiruvalluvar
தெய்வப் புலவர் திருவள்ளுவர்
புது நெறித்தமிழ் இலக்கணம்
பண்டை நாளையசேர மன்னர் வரலாறு
Comments
Post a Comment
Your feedback