காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.
( திருஞானசம்பந்தர் )
உள்ளம் அன்பால் உருக வேண்டும்.
இறை உணர்வில் கண்ணீர் பெருகவேண்டும்.
அப்படி தன்னையே நினைத்து
ஓதுபவர்களுக்கு நல்வழி தருவது அந்த நாமம்.
அது நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்கும் சிவபெருமானின் திருநாமமான “நமச்சிவாய” .
பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருஞானசம்பந்தர் பாடியவை.
16 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர்.
தன்னைத் தமிழ்ஞானசம்பந்தன் என்றே அடையாளப்படுத்திக் கொண்டவர்.
7 ஆம் நூற்றாண்டு அவர் வாழ்ந்த காலம்.
Comments
Post a Comment
Your feedback