X
உடுக்க இழந்தவன் கைபோலே ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
திருத்தம்:
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
X
இந்துத் தமிழ் நாளிதழ்
இந்து தமிழ் நாளிதழ்
X
மா. பொ. சி
ம. பொ. சி
X
காற்றைக் கலங்கப்படுத்தாதே
காற்றைக் களங்கப்படுத்தாதே
X
புனல் மட்டுமே அடைக்கப்படுகின்றன.
புனல் மட்டுமே அடைக்கப்படுகிறது.
X
அதுப் போல
அது போல
X
புரிந்துக்கொள்கிறான்
புரிந்துகொள்கிறான்
X
ஆய்ந்துப் பார்
ஆய்ந்து பார்
X
கூப்பிடுமாறுக் கூறினான்
கூப்பிடுமாறு கூறினான்
X
...ஆகியவைத் தப்பாட்டத்தின் வேறு பெயர்கள்
...ஆகியவை தப்பாட்டத்தின் வேறு பெயர்கள்
X
ஆட்சிச் செலுத்தினான்
ஆட்சி செலுத்தினான்
X
விழிப் பெற்ற பயனாகவும் மெய்ப் பெற்ற அருளாகவும் மொழிப் பெற்ற பொருளாகவும்...
விழி பெற்ற பயனாகவும் மெய் பெற்ற அருளாகவும் மொழி பெற்ற பொருளாகவும்...
X
நடந்துச் செல்வதற்குத் துன்பப்படு கிறோம்.
நடந்து செல்வதற்குத் துன்பப்படு கிறோம்.
X
அப்பாட்பட்டு
அப்பாற்பட்டு
X
பதிணென்கீழ்க்கணக்கு
பதினெண்கீழ்க்கணக்கு
X
மாகானம்
மாகாணம்
X
ஆனையம்
ஆணையம்
X
பறிந்துரை
பரிந்துரை
X
ஏற்றவாரு
ஏற்றவாறு
X
ஆசிரியத்தலை
ஆசிரியத்தளை
X
வெண்டலை
வெண்டளை
X
பறப்பினான்
பரப்பினான்
X
மன்னிட்டு மூடினான்
மண்ணிட்டு மூடினான்
X
பரிக்கப்பட்ட மலர்
பறிக்கப்பட்ட மலர்
X
தாய் பிரிந்துவிட்டால்... (எச்சம்)
தாய் பிரிந்துவிட்டாள். (முற்று)
X
உருப்புகள் இயங்குதல்
உறுப்புகள் இயங்குதல்
X
மரங்கள்தோரும்
மரங்கள்தோறும்
X
அனுப்புனர், பெறுனர்
அனுப்புநர், பெறுநர்
X
ஏராலம்
ஏராளம்
X
வெழியே
வெளியே
X
உரைமேல் முகவரி
உறைமேல் முகவரி
X
சேநாதிபதி
சேனாதிபதி
X
களைவாணர்
கலைவாணர்
X
வெழியிடுபவர்
வெளியிடுபவர்
X
கயல்விளி
கயல்விழி
X
சித்தால்
சித்தாள்
X
வேளான்மை
வேளாண்மை
X
நிபுநர்
நிபுணர்
X
நிருவனங்கள்
நிறுவனங்கள்
X
வெழியே வந்தோம்
வெளியே வந்தோம்
X
கூளித் தொழிலாளி
கூலித் தொழிலாளி
X
ஏலனம்
ஏளனம்
X
அதற்கேட்ப
அதற்கேற்ப
X
அங்கொன்ரும்
அங்கொன்றும்
X
காட்டிற்க்குள்
காட்டிற்குள்
X
மழை துளி
மழைத்துளி
X
சிறப்பு கூட்டம்
சிறப்புக் கூட்டம்
1.
பிழை :
சென்னை மாகாணத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெற்ற போது சென்னைப் பற்றியத் தீர்மானத்தை ம.பொ.சி முன்மொழிந்தார்.
திருத்தம்:
சென்னை மாகாணத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெற்ற போது சென்னை பற்றிய தீர்மானத்தை ம.பொ.சி முன்மொழிந்தார்.
2.
பிழை :
இடைக்கால ஏற்பாட்டினைப் பரிந்துறைத்திருப்பதாக அதிகாறப்பூர்வமற்ற கருத்துகள் நிலவின.
திருத்தம்:
இடைக்கால ஏற்பாட்டினைப் பரிந்துரைத்திருப்பதாக அதிகாரபூர்வமற்ற கருத்துகள் நிலவின.
3.
பிழை :
பண்டையத் தமிழ் மக்கள் தனிப்பெரும் நாகரிகத்தை உடையவராக இருந்திருக்கின்றனர்.
திருத்தம்:
பண்டைய தமிழ் மக்கள் தனிப்பெரும் நாகரிகத்தை உடையவராக இருந்திருக்கின்றனர்.
4.
பிழை :
கொள்வோர் கொள்க ; குறைப்போர் குரைக்க.
திருத்தம்:
கொள்வோர் கொள்க ; குரைப்போர் குரைக்க.
5.
பிழை :
கலம்பகம் பதினெட்டு உருபுகளைக் கொண்டது.
திருத்தம்:
கலம்பகம் பதினெட்டு உறுப்புகளைக் கொண்டது.
6.
பிழை :
வைகறை வேளையில் தங்கநிறச் சூரியன் தனது கதிர்களால் இருளைத் துறத்துகிறது.
திருத்தம்:
வைகறை வேளையில் தங்கநிறச் சூரியன் தனது கதிர்களால் இருளைத் துரத்துகிறது.
7.
பிழை :
வசன கவிதை வடிவம் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது புதுக்கவிதை வடிவம் உருவாக்க காரணமானது.
திருத்தம்:
வசன கவிதை வடிவம் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது புதுக்கவிதை வடிவம் உருவாகக் காரணமானது.
8.
பிழை :
குறள் வெண்பா இரண்டு அடிகளை கொண்டதாக வரும்.
திருத்தம்:
குறள் வெண்பா இரண்டு அடிகளைக் கொண்டதாக வரும்.
9.
பிழை :
நான் உயிர்ப்பிழைக்கும் வழிகளை அறியேன் என்று கருணையன் கூறினான்.
திருத்தம்:
நான் உயிர் பிழைக்கும் வழிகளை அறியேன் என்று கருணையன் கூறினான்.
10.
பிழை :
முதலாம் இராசராச சோழன் மெய்க்கீர்த்தி நாட்டின் வளத்தையும் ஆட்சி சிறப்பையும் நயம்பட எடுத்துரைக்கிறது.
திருத்தம்:
முதலாம் இராசராச சோழன் மெய்க்கீர்த்தி நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் நயம்பட எடுத்துரைக்கிறது.
11.
பிழை :
உயர் கல்வியைத் தமிழில் கற்பதற்க்கு வழிவகை செய்ய வேண்டும்.
திருத்தம்:
உயர் கல்வியைத் தமிழில் கற்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
12.
பிழை :
பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பதினென்
கீழ்கணக்கும் தமிழின் பெருமையை எட்டுத்திக்கும் முழங்கின.
திருத்தம்:
பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பதினெண்கீழ்க்கணக்கும் தமிழின் பெருமையை எட்டுத்திக்கும் முழங்கின.
13.
பிழை :
தெய்வத்தையோ மனிதனையோ குழந்தையாக பாவித்து பிள்ளைதமிழ் பாடினர்.
திருத்தம்:
14.
பிழை :
ஒரே பொருளை பற்றி நூறுபாடல்களை பாடுவதற்கு “சதகம்” என்று பெயர்.
திருத்தம்:
15.
பிழை :
கைமாறு கருதாமல் அறம் செய்வது பண்பாடாகும்.
திருத்தம்:
16.
பிழை :
பெற்ற சுதந்திரத்தை பேணிக்காத்தல் வேண்டும்.
திருத்தம்:
17.
பிழை :
உவமணி காணம்கொள் என்று
ஒலித்து அழுவ போன்றே!
திருத்தம்:
ஒலித்து அழுவ போன்றே!
18.
பிழை :
ஈற்றடியின் ஈற்றுச்சீர் மலர் என்னும் வாய்ப்பாட்டை கொண்டு முடிந்துள்ளது.
திருத்தம்:
ஈற்றடியின் ஈற்றுச்சீர் மலர் என்னும் வாய்ப்பாட்டைக் கொண்டு முடிந்துள்ளது.
19.
பிழை :
யானைகள் மட்டுமே
பினிக்கப்படுகின்றன. மக்கள் பினிக்கப்படுவதில்லை.
திருத்தம்:
யானைகள் மட்டுமே பிணிக்கப்படுகின்றன. மக்கள் பிணிக்கப்படுவதில்லை.
20.
பிழை :
வென்மேகங்கள் அங்கும் இங்கும் அளைமோதுகின்றன
திருத்தம்:
வெண்மேகங்கள் அங்கும் இங்கும் அலைமோதுகின்றன.
21.
பிழை :
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ் கூறு நல்லுலகம் என்றார் தொல்க்காப்பியர்.
திருத்தம்:
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ் கூறு நல்லுலகம் என்றார் தொல்காப்பியர்.
22.
பிழை :
தமிழ் தொட்டாலும் கை மனக்கும் ; சொன்னாலும் வாய் மனக்கும்.
திருத்தம்:
தமிழ் தொட்டாலும் கை மணக்கும் ; சொன்னாலும் வாய் மணக்கும்.
23.
பிழை :
உலக தமிழ் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் யார்?
திருத்தம்:
உலகத் தமிழ்க்கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் யார்?
24.
பிழை :
நேற்று என்னை சந்தித்தவர் என் நண்பர்.
திருத்தம்:
நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்.
25.
பிழை :
உடலுக்கு தேவையான உணவை தேடிக்கொணரும் வழிகளை அறியேன்.
திருத்தம்:
உடலுக்குத் தேவையான உணவைத் தேடிக்கொணரும் வழிகளை அறியேன்.
26.
பிழை :
கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வரும்போது மதில் மேலிருந்த கொடியானது மறுப்பு கூறுவதைப்போல இருந்தது.
திருத்தம்:
கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வரும்போது மதில் மேலிருந்த கொடியானது மறுப்புக் கூறுவதைப்போல இருந்தது.
27.
பிழை :
இப்படம் திருப்புடை மருதூரில் அமைந்துள்ள 17ஆம் நூற்றான்டைச் சேர்ந்த சுவரோவியம் ஆகும்.
திருத்தம்:
இப்படம் திருப்புடை மருதூரில் அமைந்துள்ள 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுவரோவியம் ஆகும்.
28.
பிழை :
ஆரிலும் சாவு நூறிலும் சாவு.
திருத்தம்:
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
29.
பிழை :
“நமது கடமை நாட்டை காக்க” என காலாட்படை கம்பீரமாக செல்கிறது.
திருத்தம்:
“நமது கடமை நாட்டைக் காக்க” என காலாட்படை கம்பீரமாகச் செல்கிறது.
30.
பிழை :
போரில் வீரர்கள் மட்டுமே கொல்லப்படுகின்றனர். மக்கள் கொள்ளப்படுவதில்லை.
திருத்தம்:
போரில் வீரர்கள் மட்டுமே கொல்லப்படுகின்றனர். மக்கள் கொல்லப்படுவதில்லை.
31.
பிழை :
சாலையோரமாக வந்து கொண்டிருந்தபோது ஒரு வாலிபன் பசியோடு இருப்பதை பார்த்தான்.
திருத்தம்:
சாலையோரமாக வந்து கொண்டிருந்தபோது ஒரு வாலிபன் பசியோடு இருப்பதைப் பார்த்தான்.
32.
பிழை :
தம்பி! குடிக்க கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? என்றான் குமரன்.
திருத்தம்:
தம்பி! குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? என்றான் குமரன்.
33.
பிழை :
ஐவகை இலக்கணங்கள் அறங்கேறின.
திருத்தம்:
ஐவகை இலக்கணங்கள் அரங்கேறின.
34.
பிழை :
குழத்து மீன்களே பிறழ்ந்து செல்கின்றன.
திருத்தம்:
குளத்து மீன்களே பிறழ்ந்து செல்கின்றன.
35.
பிழை :
ஒரு செயலை எடுத்து கொண்டால் அதை முடிப்பதற்கு எவ்வித செயல்களை செய்வாய் என்பதையும் அறிவேன்.
திருத்தம்:
ஒரு செயலை எடுத்துக் கொண்டால் அதை முடிப்பதற்கு எவ்வித செயல்களைச் செய்வாய் என்பதையும் அறிவேன்.
36.
பிழை :
நம் அனவருக்குள் ஒற்றுமை வேண்டும்.
திருத்தம்:
நம் அனைவருக்குள்ளும் ஒற்றுமை வேண்டும்.
37.
பிழை :
அந்த பக்கம் சென்றான்.
திருத்தம்:
அந்தப் பக்கம் சென்றான்.
38.
பிழை :
அவன் திருப்பி திருப்பிச் சொல்லி கொண்டான்.
திருத்தம்:
அவன் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டான்.
39.
பிழை :
கம்மஞ்சோறு தந்து அதன் மேல் துவயலையும் வைத்தார்கள்.
திருத்தம்:
கம்மஞ்சோறு தந்து அதன் மேல் துவையலையும் வைத்தார்கள்.
40.
பிழை :
காட்டில் செல்வதர்கு வழிகளை அறியேன்.
திருத்தம்:
காட்டில் செல்வதற்கு வழிகளை அறியேன்.
41.
பிழை :
ஆசிரியர்தலை மிகுதியாகவும் வெண்டலை கலித்தலை ஆகியவை விரவியும் வரும்.
திருத்தம்:
ஆசிரியத்தளை மிகுதியாகவும் வெண்டளை கலித்தளை ஆகியவை விரவியும் வரும்.
42.
பிழை:
மூன்று அடிமுதல் எழுதுபவர் மனநிலைகேர்ப அமையும்.
திருத்தம்:
மூன்று அடிமுதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும்.
43.
பிழை :
ஈரசைச்சீர் மிகுதியாகவும் காய்ச்சீர் குரைவாகவும் பயின்று வரும்.
திருத்தம்:
ஈரசைச்சீர் மிகுதியாகவும் காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும்.
44.
பிழை :
மக்களின் உரிமைகள் பறிக்க படவில்லை.
திருத்தம்:
மக்களின் உரிமைகள் பறிக்கப்படவில்லை.
45.
பிழை :
மக்களின் வாழ்வில் வெருமை இல்லை.
திருத்தம்:
மக்களின் வாழ்வில் வெறுமை இல்லை.
46.
பிழை :
இந்த கட்டுரை போட்டியில் கலந்து கொள்ள நீ எடுத்த முயற்சிகளை நான் அறிவேன்.
திருத்தம்:
இந்தக் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள நீ எடுத்த முயற்சிகளை நான் அறிவேன்.
47.
பிழை :
வள்ளுவரின் வாக்கு பொய்குமா?
திருத்தம்:
வள்ளுவரின் வாக்கு பொய்க்குமா?
48.
பிழை :
உன் அன்பு நன்பன் நான்.
திருத்தம்:
உன் அன்பு நண்பன் நான்.
Comments
Post a Comment
Your feedback