ஆபரேஷன் என்பது சர்வ சாதாரணமாக போய்விட்டது இப்போதெல்லாம். சில காலம் முன்பு ஆபரேஷன் பண்ணனும் என்று ஒரு டாக்டர் சொல்லிவிட்டால் உயில் எழுதி வைத்துவிடுவது, நெருங்கிய சொந்தக்காரர்கள் எல்லாம் சேர்ந்து முடிவு செய்யவேண்டியது என பரபரப்பான காலம்.
ஏனெனில் 100 ஆபரேஷன் நடந்தால் அதில் 10 பேர் மட்டுமே நலமுடன் வாழமுடிந்தது. நோய்த்தொற்று என்ற ஒன்றைப் பற்றி அறியாததால் அதன் காரணமாகவே உயிரிழப்புகள் நேர்ந்தன.
அப்போது தான் வெறி நாய்க்கடிக்கு மருந்து கண்டுபிடித்த லூயி பாஸ்டர் 1865 - ஆம் ஆண்டு எழுதிய ஒரு கட்டுரையை ஒரு டாக்டர் படித்தார். அதில் 'காற்றில் கிருமிகள் இருக்கின்றன. அவை புண்களில் படிந்து விஷமாகி பாதிப்பை உருவாக்குகின்றன.' என்ற வரிகளைப் படித்தார் அந்த டாக்டர்.
அது உண்மையா என்று சோதித்துப் பார்க்க முடிவு செய்தார் அவர்.
எப்படியெல்லாம் கிருமிகள் பரவும் என யோசித்து அதைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளைக் கையாண்டார்.
நோயாளியைத் தவிர வேறு எவரும் டாக்டர் பக்கத்தில் வரக் கூடாது.
முடிந்த வரை அறுவை சிகிச்சைக் கருவிகளை கொதிநீரில் போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.
ஆபரேஷன் நடக்கும் அறையில் பினாயில் என்ற கார்பாலிக் அமிலத்தை தெளித்துவிட வேண்டும்.
இப்படி பல ...
அதில் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்தது.
அடுத்து புண்களின் மீது தடவ கிருமி நாசினியைப் பயன்படுத்திப் பார்த்தார்.
இப்படித் தான் அவர் முதல் ஆன்டிசெப்டிக் மருந்தைக் (antiseptic medicine) கண்டுபிடித்தார்.
தன் அனுபவத்தை கட்டுரையாக வெளியிட்டார். அதனால் உலகப் புகழ் பெற்றார். அதன் காரணமாக விக்டோரியா மகாராணியின் முதன்மை மருத்துவர் ஆனார்.
இதுவரை அவர் அவர் என்றே சொல்லிக்கொண்டிருந்த அந்த மருத்துவர் பெயர் ஜோசப் லிஸ்டர்.
இத்தனை பெரிய கண்டுபிடிப்புக்கு உலகம் முழுவதும் உள்ள மருத்துவ உலகம் பாராட்டும் போது தனது கண்டுபிடிப்பிற்குக் காரணம் லூயி பாஸ்டர் தான் என்று சொன்னவர் அவர். 84 வயது வரை வாழ்ந்தார்.
Infection, antiseptic இந்த வார்த்தைகள் காதில் விழுகும்போதெல்லாம் அவர் பெயரும் நினைவுக்கு வரும்.
ஏப்ரல் 5 அவர் பிறந்த நாள்.
Comments
Post a Comment
Your feedback