பதினெண்மேற்கணக்கு நூல்கள்
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை:
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப் பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம் புறம்
என்று இத்திறத்த எட்டுத் தொகை.
(பன்னிரு பாட்டியல்)
அக நூல்கள் ஐந்து:
நற்றிணை,
ஐங்குறுநூறு ,குறுந்தொகை ,கலித்தொகை ,அகநானூறு.
புற நூல்கள் இரண்டு:
பதிற்றுப்பத்து, புறநானூறு
அகமும் புறமும் கலந்த நூல்:
பரிபாடல்
நற்றிணை:
1. நன்மை+திணை=நல்+திணை=நற்றிணை
2. நற்றிணை ஓர் அக நூல்.
3. 175 புலவர்கள் பாடிய 400 பாடல்கள்
இடம்பெற்றுள்ளன.
4. அடி வரையறை: 9
அடி முதல் 12 அடி வரை
5. தொகுத்தவர் இன்னார் என தெரியவில்லை .
6. தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன்
வழுதி.
7. இதன் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய
பெருந்தேவனார்
8. நற்றிணையின் கடவுள் வாழ்த்து திருமாலை
பற்றியது
9. நற்றிணையின் உள்ள பாடல்கள் ஆசிரியப்பாவால் ஆனது
10. நல் என்னும் அடைமொழியுடன் போற்றப்பட்டது
11. ஐந்து வகை திணைகளுக்குமான பாடல்கள் இடம்
பெற்றுள்ளன
நற்றிணையில் இருந்து
சில பாடல் வரிகள்:
பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப்
(போதனார்)
நீரின்றி அமையா உலகம் போலத்
தமிழின்று அமையா நம்நயந்து அருளி.
(கபிலர்)
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே .
(மிளைகிழான் நல்வேட்டனார்)
குறுந்தொகை:
1. குறுமை+தொகை=குறுந்தொகை
2. ஆசிரியப்பாக்களால் அமைந்த அகப்பொருள்
நூல்.
3. அடி வரையறை: 9
அடி முதல் 12 அடி வரை.
4. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ.
5. தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.
6. இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்- பாரதம் பாடிய பெருந்தேவனார்.
7. 'நல்ல'
என்னும் அடைமொழியுடன் சிறப்பிக்கப்படும் நூல் குறுந்தொகை.
8. பாடல்களின் எண்ணிக்கை:401(கடவுள் வாழ்த்து நீங்கலாக)
அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ
(வெள்ளி வீதியார் )
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ.
(இறையனார்)
யாரும் இல்லை தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
நினைத்தா ளன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீ ராரல் பார்க்கும்
குருகு முண்டு தான் மணந்த ஞான்றே.
(கபிலர்)
ஐங்குறுநூறு:
1. ஐந்து+குறுமை+நூறு=ஐங்குறுநூறு.
2. மூன்றடிச் சிறுமையும், ஆறடிப் பெருமையும் கொண்ட அகவற்பாக்களால் தொகுக்கப்பட்ட அகப்பொருள் நூல்.
3. திணைக்கு நூறு பாடல்களாக ஐந்து
திணைகளுக்கும் ஐநூறு பாடல்கள் உள்ளன.
4. ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடியவர்
பாரதம் பாடிய பெருந்தேவனார்
5. இந்நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுள்
சிவபெருமானை பற்றியது
6. இந்நூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்
7. தொகுப்பித்தவர் சேரமன்னன் யானைக்கட்சேய்
மாந்தரஞ் சேரலிரும்பொறை
8. ஐந்து திணைப் பாடல்களையும் பாடிய புலவர்கள்:
மருதமோ ரம்போகி நெய்த லம்மூவன்
கருதுங் குறிஞ்சி கபிலன் கருதிய
பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே
நூலையோ தைங்குறு நூறு.
மருதம்-ஓரம்போகியார்
நெய்தல்-அம்மூவன்
குறிஞ்சி-கபிலன்
பாலை-
ஓதலாந்தையார்
முல்லை- பேயனார்
ஐங்குறுநூற்றில் இருந்து சில பாடல் வரிகள்
காயா கொன்றை நெய்தல் முல்லை
போதவிழ் தளவமொடு பிடவலர்ந்து கவினிப்
(பேயனார்)
மறுவில் தூவிச்
சிறுகருங் காக்கை
அன்புடை மரபின் கிளையோ டாரப்
பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
பொலம்புனை கலத்திற் றருகுவென் யாதோ
வெஞ்சின விறல்வேற் காளையோ
டஞ்சி லோதியை வரக்கரைந் தீமே.
(ஓதலாந்தையார்)
பதிற்றுப்பத்து:
பத்து+பத்து=பதிற்றுப்பத்து
பத்து சேர அரசர்களைப் பற்றி பத்துப் புலவர்கள்
பாடிய பத்து பாடல்களே பதிற்றுப்பத்து
முதல் பத்து மற்றும் இறுதிப் பத்து நூல்களும் கிடைக்கவில்லை.
அகவற்பாவாலான புறப்பொருள் நூல்
ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் துறை , வண்ணம்
தூக்கு(இசை), பெயர் என்பவற்றைப் புலப்படுத்தும் குறிப்புகள் காணப்படுகின்றன.
ஒவ்வொரு பாட்டிலும் பொருளால் சிறப்புடைத்
தொடரொன்று அவ்வப்பாட்டின் பெயராக அமைந்துள்ளது
பிற்காலத்தில் அந்தாதித் தொடையிற் பாடல்கள்
இயற்ற வந்தவர்களுக்கு இது ஒரு வழிகாட்டியாகும்.
ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் அப்பத்தினைக்
கூறும் வரலாற்றைக் கொண்ட பதிகம் காணப்படுகிறது.அப் பதிகம் பாடினவர்
தம்பெயர், பத்துச் செய்யுட்களின் பெயர், புலவர் பெற்ற பரிசின்
அளவு,அவ்வரசர் ஆணட கால அளவு ஆகியவற்றை புலப்படுத்துகிறது
பதிற்றுப்பத்து இசையோடு பாடப்பட்ட பாடல்
பதிற்றுப்பத்து- சில பாடல் வரிகள்:
பதிபிழைப்பு
அறியாது துய்த்தல் எய்தி
நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர்
( குமட்டூர்க் கண்ணனார்)
பரிபாடல்:
ஓங்கு பரிபாடல் என
சிறப்புறக் கூறப்பெற்ற நூல்
பரிபாடலின் சிற்றெல்லை 25 அடி, பேரெல்லை 400 அடி
தமிழின் முதல் இசைப்பாடல் பரிபாடல்
எட்டுத்தொகை நூல்களுள் அறம், பொருள், இன்பம்,
என்ற நான்கையும் கூறும் நூல்
இந்நூலில் திருமால் செவ்வேல் ஆகிய தெய்வ
வழிபாட்டு பாடல்களும் வைகை மதுரை ஆகிய இயற்கை காட்சி பாடல்களும் இடம்பெற்றுள்ளன.
70 பாடல்களில் இன்று கிட்டுபவை 22 மட்டுமே அவற்றில் திருமாலுக்கு உரியவை 6
முருகனுக்கு உரியவை 8 வைகைக்கு உரியவை 8.
பாண்டியர்களையும் பாண்டிய நாட்டையும்
சிறப்பிக்கவே பாடப்பட்ட நூல் பரிபாடல்.
பரிபாடல் புராணக் கதைகளை மிகுதியாகக் கூறும் நூல்.
கலித்தொகை:
கற்றறிந்தோர் ஏத்தும் கலி, கல்விவலார் கண்ட கலி
என்னும் தொடர்களால் சிறப்பிக்கப்படும் நூல்.
கலித்தொகை கலிப்பாக்களால் அமைந்தது.
நாடகப் பாங்கில் அமைந்துள்ளது ,இசையோடு
பாடுவதற்கு ஏற்றது,துள்ளல் ஓசை கொண்டது.
குறிஞ்சி , முல்லை,மருதம் ,நெய்தல், பாலை என
ஐந்து பெரும் பிரிவுகளை உடையது.
கடவுள் வாழ்த்து சிவனைப் பற்றியது.
ஏறுதழுவுதல் பற்றி கூறும் நூல்.
கலித்தொகை
பாடலில் இருந்து சில வரிகள்:
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்
அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை
அறிவெனப்படுவது பேதையார் சொல்நோன்றல்
செறிவெனப்படுவது கூறியது மறாஅமை
நிறைவெனப்படுவது மறை பிறர் அறியாமை
முறையெனப்படுவது கண்ணோடாது உயிர்வௌவல்
பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்
(நல்லந்துவனார்)
அகநானூறு:
அகம்+நான்கு+நூறு=அகநானூறு
அகப்பொருள் அமைந்த நானூறு பாடல்கள்.
ஆசிரியப்பாவால் ஆனது.
குடவோலைத் தேர்தல் குறித்து கூறும் நூல்.
கடவுள் வாழ்த்து சிவபெருமானைப் பற்றியது.
நெடுந்தொகை என சிறப்பிக்கப்படும் நூல்.
13 அடி சிற்றெல்லை 31 அடி பேரெல்லை.
தொகுத்தவர் மதுரை உப்பூரிக் குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மர்
தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
இந்நூல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது
களிற்றியானை நிறை-120 பாடல்கள்
மணிமிடை பவளம்-180 பாடல்கள்.
நித்திலக் கோவை-100 பாடல்கள்.
1,3,5,7,...-பாலைத் திணைப் பாடல்கள்.
2,8,12,18,...-குறிஞ்சித் திணைப் பாடல்கள்.
4,14,24,...-முல்லைத் திணைப் பாடல்கள்.
6,16,26,36...-மருதத்திணைப் பாடல்கள்.
10,20,30....-நெய்தல் திணைப் பாடல்கள்.
அகநானூறு- சில வரிகள்:
பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
இருங்களிச் செறுவின் வழாஅது செய்த
(அம்மூவனார்)
புறநானூறு:
புறம்+நான்கு+நூறு=புறநானூறு.
புறப்பொருள் தொடர்பான நானூறு பாடல்களைக் கொண்ட நூல்
புறப்பாட்டு எனவும் புறம் எனவும் இந்நூல்
சிறப்பிக்கப்படுகிறது
இந்நூலின் கடவுள் வாழ்த்து சிவனைப் பற்றியது.
இந்நூல் அகவற்பாவால் ஆனது.
இந்நூல் தமிழருடைய சிறந்த கருவூலம் என்று
கூறத்தக்க பெருமையுடையது.
பண்டைய கால பேரரசர் ,சிற்றரசர் ,படைத்தலைவர்
வீரர்கள், வள்ளல்கள் ஆகியோர்களின் வரலாறுகளை ஓரளவு அறிய இந்நூல் உதவுகிறது
இந்நூலின் சில பாடல்களை ஜி .யு போப் ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்துள்ளார்.
புறநானூறு-மேற்கோள் வரிகள்:
வாயி லோயே
வாயி லோயே
வள்ளியோர் செய்விமுதல் வயங்குமொழி வித்தித் தாம்
காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே
மனநிறைவு இல்லதும் பலநாட்கு ஆகும்.
செல்வத்துப்
பயனே ஈதல்
நல்லது
செய்தலாற்றி ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே
யாதும்
ஊரே யாவரும் கேளிர்
பத்துப்பாட்டு:
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி மருவினிய
கோல நெடுநல்வாடை கோல் குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.
1.
திருமுருகாற்றுப்படை
2. பொருராற்றுப்படை,
3.சிறுபாணாற்றுப்படை
4.
பெரும்பாணாற்றுப்படை
5. முல்லைப்பாட்டு
6. மதுரைக்
காஞ்சி
7. நெடுநல்வாடை
8. குறிஞ்சிப்பாட்டு
9. பட்டினப்பாலை
10. மலைபடு கடாம்
பத்துப்பாட்டு
நூல்களுள் அகப்பொருள் பற்றியன:
முல்லைப்பாட்டு ,குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை
பத்துப்பாட்டு
நூல்களுள் புற நூல்கள் :
திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை,
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம்
அகம்புறம்
புறம் இரண்டையும் தழுவி வந்த நூல்:
நெடுநல்வாடை.
பத்துப்பாட்டு
நூல்கள்- வேறு பெயர்கள்:
திருமுருகாற்றுப்படை-புலவராற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை-பாணாறு.
முல்லைப்பாட்டு-நெஞ்சாற்றுப்படை.
குறிஞ்சிப்பாட்டு-பெருங்குறிஞ்சி.
பட்டினப்பாலை-வஞ்சி நெடும்பாட்டு.
மலைபடுகடாம்-கூத்தராற்றுப்படை.
1.திருமுருகாற்றுப்படை:
இதன் ஆசிரியர் நக்கீரர்.
பாடப்பட்டவர் முருகன்.
317 அடிகள் ஆசிரியப்பாவால் ஆனது.
ஆற்றுப்படை நூல்கள் பரிசில் பெறச் செல்வோரால் பெயர் பெறும்.
திருமுருகாற்றுப்படை மட்டும் பரிசில் கொடுப்போனால் பெயர் பெற்றது.
2.பொருநாறாற்றுப்படை
இதன் ஆசிரியர் முடத்தாமக்கண்ணியார்.
பாட்டுடைத் தலைவன் கரிகால் பெருவளத்தான்.
ஆசிரியப்பாவால் ஆனது.
கரிகால் சோழனின் பெருமையும் கொடை வழங்கும் சிறப்பினையும் வீரத்தையும் காவிரியின்
சிறப்பினையும் இந்நூல் விவரிக்கிறது.
3. சிறுபாணாற்றுப்படை:
பாடியவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்.
பாடப்பட்டவர் ஓய்மா நாட்டு நல்லியக்கோடன்.
269 அடிகள் கொண்ட ஆசிரியப்பாவால் ஆனது.
கடையேழு வள்ளல்களைப் பற்றி கூறும் நூல்
4. பெரும்பாணாற்றுப்படை:
பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
பாட்டுடைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையன்.
500 அடிகள் கொண்ட ஆசிரியப்பாவால் ஆனது.
5. முல்லைப்பாட்டு:
பத்துப்பாட்டு நூல்களில் மிகச் சிறிய அடிஅளவைக் கொண்ட பாடல்.
103 அடிகளை உடையது.
ஆசிரியர் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்.
பாசறை அமைப்பைப் பற்றிக் கூறும் நூல் –முல்லைப்பாட்டு
6.மதுரைக்காஞ்சி:
பாடியவர் மாங்குடி மருதனார்.
பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.
பத்துப்பாட்டு நூல்களுள் மிகப்பெரிய பாடல்.
மதுரைக்காஞ்சி 782 அடிகளை உடைய நூல்.
இந்நூல் "பெருகு வளமதுரைக் காஞ்சி" எனப் புகழப்படுகிறது.
இதற்கு கூடற்றமிழ் என்னும் சிறப்பு பெயரும் உண்டு.
7. நெடுநெல்வாடை:
பாடியவர் நக்கீரர்.
பாட்டுடைத் தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன்.
188 அடிகள் கொண்டது.
அரண்மனை அமைப்பைப் பற்றி கூறும் நூல் நெடுநல்வாடை
8. குறிஞ்சிப்பாட்டு:
பாடியவர் கபிலர்.
ஆரிய அரசன் பிரகத்தனுக்கு தமிழ் சுவையினையும் அகப்பொருள் மரபினையும் உணர்த்த
வேண்டிப் பாடப்பட்ட நூல்.
99 பூக்கள் குறித்துக் கூறும் நூல் குறிஞ்சிப்பாட்டு.
9.பட்டினப்பாலை:
கடியலூர் உருத்திரங்கண்ணனார் சோழன் கரிகாலன் பெருவளத்தானைப் பாடியது.
301 அடிகள் கொண்ட வஞ்சியடிகள் கலந்த ஆசிரியப்பா
10. மலைபடுகடாம்:
இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடியது.
பாட்டுடைத் தலைவன் செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன்.
583 அடிகள் ஆசிரியப்பாவால் ஆனது
Comments
Post a Comment
Your feedback