இருப்பானிடங் கொடுவெனக் கொடுத்தனன் இரண்டினில்
ஒருபேனா இனியொரு தடையில்லை தொடர்ந்தெழுத
கருப்பில் எழுதா தேயென் றார்
இருக்கும் இதுவொன் றும்போச் சே.
இது பாவாகுமா?
நிச்சயமாக.
இது ஆசிரியப்பா தான்.
முதலில் அசை , தளை என்ற சடங்குகளை முடித்து விட்டு அதன் பின் விதிகளுக்கு வருவோம்.
அசை:
இருப்/பா/னிடங் -புளிமாங்கனி
கொடு/வெனக்-கருவிளம்
கொடுத்/தனன்-கருவிளம்
இரண்/டினில்-கருவிளம்
ஒரு/பே/னா-புளிமாங்காய்
இனி/யொரு-கருவிளம்
தடை/யில்/லை-புளிமாங்காய்
தொடர்ந்/தெழு/த-கருவிளங்காய்
கருப்/பில்-புளிமா
எழு/தா-புளிமா
தே/யென்-தேமா
றார்-மா
இருக்/கும்-புளிமா
இது/வொன்-புளிமா
றும்/போச்-தேமா
சே-மா
தளை:
இருப்/பா/னிடங் > கொடு/ வெனக் : ஒன்றிய வஞ்சித்தளை
கொடு/ வெனக்>கொடுத்/தனன்: நிரையொன்றிய ஆசிரியத்தளை
கொடுத்/தனன்>இரண்/டினில்: நிரையொன்றிய ஆசிரியத்தளை
இரண்/டினில்>ஒரு/பே/னா: நிரையொன்றிய ஆசிரியத்தளை
ஒரு/பே/னா> இனி/யொரு: கலித்தளை
இனி/யொரு>தடை/யில்/லை: நிரையொன்றிய ஆசிரியத்தளை
தடை/யில்/லை>தொடர்ந்/தெழு/த: கலித்தளை
தொடர்ந்/தெழு/த>கருப்/பில்: கலித்தளை
கருப்/பில் >எழு/தா/தே: இயற்சீர் வெண்டளை
எழு/தா/தே >யென்/றார்: நேரொன்றிய ஆசிரியத்தளை
யென்/றார்>இருக்/கும்: இயற்சீர் வெண்டளை
இருக்/கும்>இது/வொன்: இயற்சீர் வெண்டளை
இது/வொன்> றும் /போச் : நேரொன்றிய ஆசிரியத்தளை
றும் /போச் >சே: நேரொன்றிய ஆசிரியத்தளை
தளைகளின் எண்ணிக்கை:
வஞ்சித்தளை-1
ஆசிரியத்தளை -8
கலித்தளை-3
வெண்டளை-3
சரி , இப்போது முக்கியமான கட்டத்துக்கு வந்து விட்டோம்.
Comments
Post a Comment
Your feedback