அது நம் எண்ணங்களின் எழில் திரை...
பிறர் சொல்லும் போது நாம் கேட்க, பிறர் கேட்கும் போது நாம் சொல்ல என தட்டுக்கும் வாய்க்கும் நடுவே ஓடிக் கொண்டிருக்கும் ஒரு குட்டிக் கரண்டி...
நம் உணர்ச்சிகள் உட்கார்ந்து கொண்டு அங்கும் இங்கும் ஆடி விளையாடக் கிடைத்த அழகான ஊஞ்சல்...
வசந்தத்தில் வந்து போக எத்தனையோ இருந்தாலும் இலையுதிர் காலத்திலும் இருக்கும் ஒன்றே ஒன்று...
நேற்றைக் கொண்டு வந்து நாளையோடு சேர்க்கும் பாலம்...
பேச்சுக் குதிரை ஒரு பக்கம் எழுத்துக் குதிரை ஒரு பக்கம் என்று இரண்டு குதிரைகள் இழுத்துச் செல்லும் ஒப்பில்லாத் தேர்...
சொந்தபந்தமெல்லாம் இங்கிருக்க உடம்பொரு பக்கம் உணர்வொரு பக்கம் என்று ஏதோ ஒரு நாட்டில் வாழ்ந்திருக்கும் போது எங்கிருந்தோ காதில் விழும் ஒற்றைச் சொல் தரும் சிலிர்ப்பு..
எத்தனையோ காலத்துக்கு முன்பிருந்த யாரெல்லாம் ... எப்படியெல்லாம் ... என்று இன்றைக்கும் காட்டுகின்ற மாயக் கண்ணாடி...
அலுத்து வந்த நேரத்தில் மகிழ்ச்சியூட்டும் இன்னமுதம்...
இசைந்த நேரத்தில் கேட்கத்தூண்டும் இன்னிசை...
நாலு விஷயங்களையும் அறிய அறிவுப் பயிர் வளர்க்கும் பண்ணை நிலம்...
எது அது?
Comments
Post a Comment
Your feedback