அண்ணாடம் காட்டும் டிவித்தொடர்ச் சோகத்தால்
கண்ணைக் கசக்கினாள் காமாட்சி - கண்ணிலே
மெட்ராஸ்ஐ வந்தும் மெகாத்தொடர் பார்த்தபின்
சொட்டு மருந்திட்டாள் சோர்ந்து.
இது இரு விகற்ப நேரிசை வெண்பா.
எப்படி?
அசை:
1.அண்/ணா/டம் - தேமாங்காய்
2.காட்/டும் – தேமா
3.டிவித்/தொடர்ச் - கருவிளம்
4.சோ/கத்/தால் - தேமாங்காய்
5.கண்/ணைக் - தேமா
6.கசக்/கினாள்- கருவிளம்
7.கா/மாட்/சி- தேமாங்காய்
8.கண்/ணிலே-கூவிளம்
9. மெட்/ராஸ்/ஐ -தேமாங்காய்
10.வந்/தும் -தேமா
11.மெகாத்/தொடர்-கருவிளம்
12.பார்த்/தபின்-கூவிளம்
13.சொட்/டு-தேமா
14.மருந்/திட்/டாள்-புளிமாங்காய்
15.சோர்ந்/து- காசு
தளை:
1>2 : அண்/ணா/டம் > காட்/டும் (வெண்சீர்வெண்டளை )
2>3: காட்/டும் > டிவித்/தொடர்ச் ( இயற்சீர்வெண்டளை )
3>4: டிவித்/தொடர்ச் > சோ/கத்/தால் ( இயற்சீர்வெண்டளை )
4>5: சோ/கத்/தால்> கண்/ணைக் (வெண்சீர்வெண்டளை )
5>6: கண்/ணைக்> கசக்/கினாள் ( இயற்சீர்வெண்டளை )
6>7: கசக்/கினாள்> கா/மாட்/சி ( இயற்சீர்வெண்டளை )
7>8: கா/மாட்/சி> கண்/ணிலே ( வெண்சீர்வெண்டளை )
8>9: கண்/ணிலே> மெட்/ராஸ்/ஐ ( இயற்சீர்வெண்டளை )
9>10: மெட்/ராஸ்/ஐ> வந்/தும் ( வெண்சீர்வெண்டளை )
10>11: வந்/தும் > மெகாத்/தொடர் ( இயற்சீர்வெண்டளை )
11>12: மெகாத்/தொடர்> பார்த்/தபின் ( இயற்சீர்வெண்டளை )
12>13: பார்த்/தபின்> சொட்/டு ( இயற்சீர்வெண்டளை )
13>14: சொட்/டு> மருந்/திட்/டாள் ( இயற்சீர்வெண்டளை )
14>15: மருந்/திட்/டாள்> சோர்ந்/து ( வெண்சீர்வெண்டளை )
எப்படி இது இரு விகற்ப நேரிசை வெண்பா?
ஈற்றடியின் ஈற்றுச்சீரைத் தவிர்த்து ஈரசைச்சீர்களும் காய்ச்சீர்களும் மட்டுமே பயின்று வருதல் வேண்டும்.
அப்படித்தான் வருகிறது.
வெண்டளைகள் மட்டுமே பயின்று வருதல் வேண்டும்.
வெண்டளைகள் மட்டுமே
வருகின்றன.
ஈற்றடி மூன்று சீர்களும் ஏனைய அடிகள் நான்கு சீர்களும் கொண்டிருத்தல் வேண்டும்.
அப்படித்தான் வருகிறது.
ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு ஆகியவற்றுள் இருத்தல் வேண்டும்.
காசு என முடிகிறது.
நேரிசையாகின் ஒருவிகற்பமோ அல்லது இருவிகற்பமோ கொண்டு எதுகை அமைந்த தனிச்சொல் பெற்று வருதல் வேண்டும்.
கண்ணிலே என்பது எதுகை அமைந்த தனிச்சொல்.
அண்-கண், மெட்-
சொட் என இருவிகற்பம் வருகிறது.
ஆக,
4 அடிகளுடன் 2 விகற்பங்கள் கொண்டு எதுகை அமைந்த தனிச்சொல் பெற்று வந்ததால் இரு விகற்ப நேரிசை வெண்பா ஆயிற்று.
Comments
Post a Comment
Your feedback