இலக்கணக் குறிப்பு
வண்ணமும்
சுண்ணமும் – எண்ணும்மை
பயில்தொழில் – வினைத்தொகை
காக்கென்று
– காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்
கணீர்
– கண்ணீர் என்பதன் இடைக்குறை
காய்மணி –
வினைத்தொகை
உய்முறை
– வினைத்தொகை
செய்முறை
– வினைத்தொகை
மெய்முறை
– வேற்றுமைத்தொகை
கைமுறை
– மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க
தொகை
பகுபத உறுப்பிலக்கணம்
மயங்கிய – மயங்கு + இ(ன்) + ய் + அ
மயங்கு
– பகுதி
இ(ன்)
– இறந்த கால இடைநிலை
‘ன்’
– புணர்ந்து கெட்டது.
ய்
– உடம்படு மெய்
அ
– பெயரெச்ச விகுதி
அறியேன் = அறி + ய் + ஆ + ஏன்
அறி
– பகுதி
ய்
– சந்தி
ஆ
– எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது
ஏன்
– தன்மை ஒருமை வினைமுற்று
ஒலித்து = ஒலி + த் + த் + உ
ஒலி
– பகுதி
த்
– சந்தி
த்
– இறந்தகால இடைநிலை
உ
– வினையெச்ச விகுதி
அகராதியில் காண்க.
1
1. அடவி-காடு
2. அவல்-பள்ளம்
3. சுவல்-பிடரி, முதுகு
4. செறு-வயல், கோபம்
5. பழனம்-வயல்
6. புறவு-சிறுகாடு
2
1. மன்றல்-திருமணம்
2. அடிச்சுவடு-காலடிக்குறி
3. அகராதி-அகர வரிசை சொற்பொருள் நூல்
4. தூவல்-மழை/நீர்த்துளி
5. மருள்-மயக்கம்
3
1.
அகன்சுடர்-சூரியன், விரிந்து சுடர், அகன்ற சுடர்
2. ஆர்கலி-கடல், மழை, ஆரவாரம், பேரொலி, வெள்ளம்
3. கட்புள்-பறவை, ஒரு புலவன்
4. கொடுவாய்-புலி, வளைந்த வாய், பழிச்சொல்
5. திருவில்-வானவில், இந்திரவில்
4
அ) அவிர்தல் -ஒளி செய்தல், விரிதல், பாடம் செய்தல்
ஆ) அழல் - தீ, நெருப்பு, கள்ளி
இ) உவா -இளமை, இளையோன், கடல், நிறைவு, பூரணை, யானை
ஈ) கங்குல் -இரவு, இருள், பரணி நாள்
உ) கனலி -சூரியன், கள்ளி, நெருப்பு
5
1. தால் -தாலாட்டு,தாலு,நாக்கு
2. உழுவை -புலி,ஒருவகை மீன்,தும்பிலி
3. அகவுதல் -அழைத்தல்,ஆடல்,கூத்தாடல்
4. ஏந்தெழில் -மிக்க அழகு,மிக்க வனப்பு
5. அணிமை -சமீபம்,அருகு,நுட்பம்,நுண்மை
6
1. குணதரன் -நற்குணமுள்ளவன்,முனிவன்
2. செவ்வை -செம்மை,மிகுதி
3. நகல் -படி,பிரதி
4. பூட்கை -யானை
7
1. மிரியல்-மிளகு
2. வருத்தனை-பிழைப்பு, தொழில், பெருகுதல், சம்பளம்
3. அதசி-சணல்
4. துரிஞ்சில்-வெளவால் வகை, சீக்கரி மரம்
8
1.ஆசுகவி-கொடுத்த பொருளில் உடனே பாடும் பாட்டு
2. மதுரகவி-இனிமை பெருகப் பாடும் கவி
3.சித்திரகவி-சித்திரத்தில் அமைத்தற்கு ஏற்ப பாடும் பாட்டு
4.வித்தாரகவி-விரித்துப் பாடப் பெறும் பாட்டு
9
1.
ஊண் – ஊன்
ஊண்
– உணவு
ஊன்
– மாமிசம்
2. திணை – தினை
திணை
– உயர்திணை, அஃறிணை போன்ற இலக்கணப் பாகுபாடு
தினை
– சிறு தானிய வகை
3. அண்ணம் – அன்னம்
அண்ணம்
– உள் நாக்கு
அன்னம்
– சோறு
4. வெல்லம் – வெள்ளம்
வெல்லம்
–இனிப்புப் பொருள்
வெள்ளம்
– ஆற்றில் கரைபுரண்டு ஓடுவது
உவமையைப் பயன்படுத்திச்
சொற்றொடர் உருவாக்குக.
1. தாமரை இலை நீர்போல
என் நண்பன்
அனைவரிடமும் தாமரை இலை நீர்போல, பட்டும் படாமலும்
பழகுவான்.
2. மழைமுகம் காணாப் பயிர்போல
தாயை
இழந்த கருணையன் மழைமுகம் காணாப் பயிர்போல வாடினான்.
3. கண்ணினைக் காக்கும் இமை போல
பெற்றோர்கள்
அவர்களின் பிள்ளைகளை, கண்ணினைக் காக்கும் இமை போல பாதுகாத்து வளர்ப்பர்
4. சிலை மேல் எழுத்து போல
இளமையில்
கற்பது சிலை மேல் எழுத்து போல மனதில்
பதிந்தது
மரபுத் தொடருக்கான பொருளறிந்து
தொடரில் அமைத்து எழுதுக.
1. மனக்கோட்டை
முயற்சி
இல்லாமல் முன்னேறலாம் என நாம் மனக்கோட்டை கட்டக்கூடாது.
2.
கண்ணும் கருத்தும்
நாம் படிப்பில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
3. அள்ளி இறைத்தல்
பணத்தைக்
கணக்குப் பார்க்காமல் அள்ளி இறைத்தல் நம்மை வறுமை நிலைக்குத் தள்ளிவிடும்.
4. ஆறப்போடுதல்
குடும்பச்
சண்டைகளைப் பெரிதாக்காமல் ஆறப்போடுதல் நல்லது.
வினைமுற்றை வினையாலணையும் பெயராக
மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக.
1. கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்.
கலையரங்கத்தில்
எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள்.
2. ஊட்டமிகு உணவு உண்டார். அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.
ஊட்டமிகு
உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்
3. நேற்று என்னைச் சந்தித்தார். அவர் என் நண்பர்.
நேற்று
என்னைச் சந்தித்தவர் என் நண்பர்
4. பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார். போட்டித் தேர்வில் வென்றார்.
பொது
அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.
சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க.
(இன்சொல், எழுகதிர், கீரிபாம்பு, பூங்குழல் வந்தாள், மலை வாழ்வார், முத்துப்பல்)
1. இன்சொல் – பண்புத்தொகை
இனிமையான
சொல் கூறுதல் சான்றோர்க்கு அழகு
2. எழுகதிர் – வினைத்தொகை
கடலின்
நடுவே தோன்றும் ஏழுகதிரின் அழகே அழகு
3. கீரிபாம்பு – உம்மைத்தொகை
பகைவர்கள்
எப்போதும் கீரியும் பாம்பும் போல இருப்பார்கள்
4. பூங்குழல் வந்தாள் – அன்மொழித் தொகை
பூப்
போன்ற கூந்தலையுடைய பெண் வந்தாள்
5. மலை வாழ்வார் – ஏழாம் வேற்றுமைத் தொகை
பழங்குடியினர்
மலையின் கண் வாழ்பவர்
6. முத்துப் பல் – உவமைத் தொகை
வெண்மதியின்
முத்துப் பல் மேலும் அவளுக்கு அழகு சேர்க்கிறது.
தொடர்களை அடைப்புக்குறிக்குள்
குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக.
1. அழைப்புமணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார்
(தனிச்
சொற்றொடர்களைக் கலவைச் சொற்றொடராக மாற்றுக)
விடை : அழைப்புமணி ஒலித்ததால், கயல்விழி கதவைத் திறந்தார்.
2. இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தினார். அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கிவைத்தார். புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக்கொடுத்தார்.
(தொடர் சொற்றொடராக மாற்றுக.)
விடை : இன்னாசியார்
புத்தகங்களை வரிசைப்படுத்தி அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கி புத்தகங்களைக்
கேட்டவர்களுக்கு எடுத்துக்கொடுத்தார்.
3. ஒயிலாட்டத்தில் குழுவினர் ஒரே நிறத் துணியை முண்டாசுபோலக் கட்டிக்கொண்டு, காலில் சலங்கை அணிந்துகொண்டு, கையில் ஒரு சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவர்.
(தனிச் சொற்றொடர்களாக மாற்றுக.)
விடை : ஒயிலாட்டத்தில்
குழுவினர் ஒரே நிறத் துணியை முண்டாசுபோலக் கட்டிக் கொள்வர். காலில் சலங்கை அணிவர்.
கையில் ஒரு சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவர்.
4. கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கினார். கூடியிருந்த மக்கள்
அமைதியாயினர்.
(கலவைச்
சொற்றொடராக மாற்றுக.)
விடை : கூத்துக் கலைஞர்
பாடத் தொடங்கியதால் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.
5. ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன், அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது.
(தனிச்
சொற்றொடர்களாக மாற்றுக.)
விடை
: ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றது. அறையில் உள்ளவர்கள் பேச்சு
தடைபட்டது.
கலைச்சொல் அறிவோம்
Vowel – உயிரெழுத்து
Consonant – மெய்யெழுத்து
Homograph – ஒப்பெழுத்து
Monolingual – ஒரு மொழி
Conversation – உரையாடல்
Discussion – கலந்துரையாடல்
Storm – புயல்
Land
Breeze – நிலக்காற்று
Tornado – சூறாவளி
Sea
Breeze – கடற்காற்று
Tempest – பெருங்காற்று
Whirlwind – சுழல்காற்று
Classical
literature -செவ்விலக்கியம்
Epic
literature- காப்பிய இலக்கியம்
Devotional
literature- பக்தி இலக்கியம்
Ancient
literature- பண்டைய இலக்கியம்
Regional
literature- வட்டார இலக்கியம்
Folk
literature -நாட்டுப்புற இலக்கியம்
Modern
literature- நவீன இலக்கியம்
Nanotechnology – மீநுண்தொழில்நுட்பம்
Space
Technology – விண்வெளித் தொழில்நுட்பம்
Biotechnology – உயிரித் தொழில்நுட்பம்
Cosmic
rays – விண்வெளிக் கதிர்கள்
Ultraviolet
rays – புற ஊதாக் கதிர்கள்
Infrared
rays – அகச்சிவப்புக் கதிர்கள்
Lute
music - யாழிசை
Grand-daughter-பேத்தி
Rote-நெட்டுரு
Didactic
compilation-நீதிநூல் திரட்டு
Emblem – சின்னம்
Intellectual – அறிவாளர்
Thesis – ஆய்வேடு
Symbolism – குறியீட்டியல்
Revolution – புரட்சி
Strike - வேலை நிறுத்தம்
Aesthetics – அழகியல், முருகியல்
Terminology – கலைச்சொல்
Artifacts -கலைப் படைப்புகள்
Myth – தொன்மம்
Consulate – துணைத்தூதரகம்
Patent – காப்புரிமை
Document – ஆவணம்
Guild – வணிகக் குழு
Irrigation – பாசனம்
Territory – நிலப்பகுதி
Belief – நம்பிக்கை
Philosopher – மெய்யியலாளர்
Renaissance – மறுமலர்ச்சி
Revivalism – மீட்டுருவாக்கம்
Humanism – மனிதநேயம்
Cultural
Boundaries – பண்பாட்டு எல்லை
Cabinet – அமைச்சரவை
Cultural
values – பண்பாட்டு விழுமியங்கள்
Comments
Post a Comment
Your feedback