அவள் தினைப்புனம் காவலுக்கு வருகிறாள். அங்கே அவனைப் பார்த்துப் பேசுகிறாள். நாளும் நாளும் அது தொடர்கிறது. இப்படியிருக்க ஒருநாள் அவள் தோழி அவனிடம் சொல்கிறாள்.
கைகளைக் குவித்து வைத்தது போல காந்தள் மலர்கள் (கண் வலிப் பூ) மலர்ந்திருக்கும்.
அந்தப் பூக்களை, பெண்குரங்குகள் பறித்து வைத்துக்கொண்டு ஆடும்.
அது எப்படி இருக்கும் தெரியுமா?
திருமண விழாவில் கொண்டு செல்வார்களே முளைப்பாலிகை அது போல ஏந்திக்கொண்டு அவை ஆடும்.
இப்படிப்பட்ட பெருமை கொண்ட இந்த மலை நிலப்பரப்பைச் சேர்ந்த தலைவனே!
தினைப்புனம் காக்கும் பணி முடிந்துவிட்டது. இனி நாங்கள் இங்கு வருவது கஷ்டம்.
இது தான் சொன்ன விஷயம். சொல்ல வந்த விஷயம் இது தான்.
தினைப்புனம் போகிறோம் என்று சொல்லிவிட்டு இத்தனை நாள் இங்கு வர முடிந்தது. வந்து உன்னைப் பார்க்க முடிந்தது. அந்தக் காவல் வேலை இன்று முடிந்துவிட்டது.
இனி அப்படி வரமுடியாது.
அதனால் அவளைத் திருமணம் முடிக்க வந்து அவள் வீட்டில் பேசு. இனி உங்கள் திருமணம் முடிந்த பிறகு தான் அவளோடு நீ பேசமுடியும்; பார்க்கமுடியும்.
கணமுகை கையெனக் காந்தள் கவின
மணமுகை யென்றெண்ணி மந்திகொண் டாடும்
விறன்மாலை நாட! வரிஅரிதாங் கொல்லோ
புனமும் அடங்கின காப்பு.
கண்ணஞ்சேந்தனார் - திணைமொழி
Comments
Post a Comment
Your feedback