அடர்ந்த காடுகள் பெரிய சோலைகள் இதெல்லாம் மன்மதனின் படைவீடுகளோ?
அழகிய இந்த வானம் அந்த மன்மதனின் தேரோடும் வீதி தானோ!
அலைபாயும் இந்தக் கடல் தான் அவனது மீன்கொடியோ!
இப்படி அந்த மன்மதனின் சாம்ராஜ்யம்.
எனக்கு அதில் ஒரு சந்தேகம்.
இந்த உலகம் பூராவும் உள்ள புராணங்கள் எல்லாம் சிவபெருமான் மன்மதனை எரித்து விட்டதாகச் சொல்கின்றன.
அந்த மன்மதன் எரிந்து போனது உண்மையானால் நான் இப்படி காதல் மயக்கத்தில் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்கமாட்டேனே!
சிவ பெருமான் மன்மதனை எரித்து விட்டான் என்று சொன்னதெல்லாம் பொய்யாகத் தான் இருக்குமோ!
நளன் மேல் காதல் கொண்ட தமயந்திக்குத் தான் இப்படியொரு சந்தேகம்!
கானும் தடங்காவும் காமன் படைவீடு
வானும்தேர் வீதி மறிகடலும் - மீனக்
கொடியாடை வையமெல்லாம் கோதண்ட சாலை
பொடியாடி கொன்றதெல்லாம் பொய்.
(நளவெண்பா)
கான் - கானகம்
தடங்கா - பெரிய சோலைகளும்
மறிகடல் - அலை பாயும் கடல்கள்
கோதண்ட சாலை - போர்க் களம்
பொடியாடி - சிவபெருமான்
(சாம்பல் பொடியை உடலில் பூசிக் கொண்டு ஆடுவதால் பொடியாடி.
ஆகா இப்படி ஒரு பெயரா!)
Comments
Post a Comment
Your feedback