கதறுது கதவு
தாய்மார்கள் கதவினை அடைக்கிறார்கள்;
பெண்கள் கதவினை திறக்கிறார்கள்.
ஏன்?
சேரமன்னன் தேரில் போகிறான்.
வண்டுகள் தேனினை எடுக்க மொய்த்திடும் மிகுந்த நறுமணம்
மிக்க மலரை அணிந் து, வேகமாக ஓடும் புரவி பூட்டியதேரின் மீது அமர்ந்து போகிறான் சேரமன்னன்.
அவனைக் காண பெண்கள்
வீட்டுக்கதவுகளைத் திறக்க, எங்கு சேர
மன்னனின் அழகில் மயங்கி நம் வீட்டுப் பெண்கள் குடும்பப் பெருமைக்கு இழுக்கு
சேர்த்து விடுவரோ என்று அப்பெண்களின் தாய்மார்கள் கதவினை அடைக்க…
இவர்கள் இப்படி மாறி மாறி அடைக்கவும், திறக்கவும் இருக்க…
இவர்கள் மத்தியில் அகப்பட்டு கொண்ட கதவின்
குமிழிகள் தான் பாவம் தேய்ந்து கொண்டே இருக்கின்றன.
தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத்
தேயத் திரிந்த குடுமியவே-ஆய்மலர்
வண்டுலாஅங் கண்ணி வயமான்தேர்க்
கோதையைக்
கண்டுலாஅம் வீதிக் கதவு.
(முத்தொள்ளாயிரம்)
Comments
Post a Comment
Your feedback