உள்ளுர்க் கோவில் விசேஷம் என்றால் ஊரே விழாக்கோலம் தான்.
அவன் பக்கத்தில் இருக்கும் போது என் மனசும் அப்படி ஆகிவிடுகிறது.
ஆனால் அவன் வெளியூர் போயிருக்கும் போது எனக்குள் ஏனோ ஒரு வெறுமை வந்து விடுகிறது.
யாரும் குடியிருக்காத வீட்டில் அணில் மட்டும் விளையாடிக்கொண்டிருப்பது மாதிரி ஆகிவிடுகிறது என் நெஞ்சம்.
அணில் விளையாடும் ஆளில்லாத வீடுவேண்டாம்.
விழாக் கோலம் பூண்ட வீதிக்கு ஏங்குது என் மனம்.
எப்போது தான் அவன் வருவானோ?
காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து,
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற;
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்
புலப்பில் போலப் புல்லென்று
அலப்பென் தோழி! அவர் அகன்ற ஞான்றே.
அணிலாடு முன்றிலார்
(குறுந்தொகை 41)
Comments
Post a Comment
Your feedback