கொடுக்கப்பட்டுள்ள
சொற்களில் 'உம்' எனும் விகுதி வெளிப்படையாக வருமாயின்
அது எண்ணும்மை எனப்படும்.
அல்லும் பகலும்
காதலும் கற்பும்
அவனும் இவனும்
என்பதெல்லாம்
எண்ணும்மைகள்.
முழுக்க
முழுக்க எண்ணும்மைகளைக் கொண்டே பாரதிதாசன் ஒரு பாடல் எழுதியுள்ளார்.
அவளும்
நானும் எப்படி தெரியுமா? என்பதற்கு விடையாக வரும் எண்ணும்மைப் பாடல் இது.
அவளும் நானும்..
அமுதும் தமிழும்..
அவளும் நானும்.. அலையும் கடலும்..
அவளும் நானும்.. தவமும் அருளும்..
அவளும் நானும்.. வேரும் மரமும்..
ஆலும் நிழலும்.. அசைவும் நடிப்பும்..
அணியும் பணிவும்.. அவளும் நானும்..
அவையும் துணிவும்.. உழைப்பும் தழைப்பும்..
அவளும் நானும்..அளித்தலும் புகழும்..
மீனும் புனலும்.. விண்ணும்
விரிவும்..
வெற்பும் தோற்றமும்.. வேலும் கூரும்..
ஆறும் கரையும்.. அம்பும் வில்லும்..
பாட்டும் உரையும்.. நானும் அவளும்..
நானும் அவளும்.. உயிரும் உடம்பும்..
நரம்பும் யாழும்.. பூவும் மணமும்..
நானும் அவளும்.. உயிரும் உடம்பும்..
நரம்பும் யாழும்.. பூவும் மணமும்..
அவளும் நானும்..தேனும் இனிப்பும்..
அவளும் நானும்..சிரிப்பும் மகிழ்வும்..
அவளும் நானும்..திங்களும் குளிரும்..
அவளும் நானும்..கதிரும் ஒளியும்..
அவளும் நானும்.. அமுதும் தமிழும்..
அவளும் நானும்.. அமுதும் தமிழும்..
Comments
Post a Comment
Your feedback