வயலில் காளை மாடுகளைப் பூட்டி உழுது கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பூட்டு உழுது முடித்ததும், உழுத காளை மாடுகளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு அடுத்த பூட்டு மாடுகளைப் பூட்டத் தொடங்குகிறார்கள்.
அதுவரை உழுத காளைகளை விவசாயிகள் அவிழ்த்து மேயவிட்டார்கள்.
பூட்டப்படாத வேறு காளைகளை ஏரில் பூட்டினார்கள்.
அப்போது,
வயல் சேற்றில் ஒரு வரால் மீன் துள்ளிக் குதித்தது. அதைப் பார்த்த ஒரு மயிலைக் காளை மிரண்டு அங்கும் இங்கும் ஓடியது. எதிரில் வருபவர்களையெல்லாம் முட்டித் தள்ளியது.
எல்லோரும் என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கும்போது, அந்தப் பள்ளன் தைரியமாக முன்னே வந்து பேசினான்.
‘கவலைப்படாதீர்கள், இந்த மாட்டின் குறும்பை அடக்குவதற்கு நான் இருக்கிறேன்’ என்றான்.
மறுவிநாடி,
அவன் மாட்டின் முன்னே சென்று, அதைத் தடுத்து நின்றான்.
அவனைக் கொம்பின் நுனியால் குத்தித் தள்ளியது காளை. பள்ளனும் லேசான மயக்கத்தில் கீழே விழுந்தான்.
பூட்டும் காளையை விட்டுப் பூட்டாக் காளையைப் பூட்டும் பொழுதில் ஒரு புல்லைக் காளை
மோட்டு வரால் குதிக்க முகத்தை மாறி முடிக்கி மறிக்கும் ஆளை முட்டி ஓட
மாட்டுக் குறும்பு அடங்க மறிப்பன் எனவே வடிவழகக் குடும்பன் வந்து மறித்தான்
கோட்டு முனையால் அது குத்தும் அளவில்
குடும்பன் சற்றே மயக்கம் கொண்டு விழுந்தான்.
(முக்கூடற் பள்ளு)
Comments
Post a Comment
Your feedback