Nothing lasts for ever
- Sydney Shelton
மூன்று Lady doctors...Paige, Kat, Honey.
அவர்களின் சிறு வயதில் ஆரம்பித்து வாழ்க்கை நெடுகச் செல்கிறது கதை.
Kat, கவர்ந்ததிழுக்கும் அழகு கொண்ட கருப்பு நிறப் பெண். மென்மையான இயல்பு.
Kat சிறிது காலம் இந்தியா வந்த போது கற்றுக் கொண்ட விஷயங்கள்... இந்தி உட்பட என கொஞ்சம் நம் மண் வாசம்.
Country Hospital லில் ஆரம்பித்து அங்கேயே கதை முடிவடைகிறது.
சபலம் பிடித்த Ken க்கு சரியான தண்டனை.அதை நிரூபிக்க Paige எடுத்துக் கொண்ட அந்த சிரமங்கள் நமக்கும் வலியைத் தருகின்றன.
Kat இறந்துவிட்டாள் என நம்ப சிரமமாக இருக்கிறது.
Mike ன் நிலைக்கு வருத்தப்படவில்லை. என்றாலும் Mike தன் sister ஐ நிம்மதியாக இருக்க விடவில்லை என்பதால் ஒரு மாதிரியான கோபம் வருகிறது.
Paige சிறையில் இருக்கும் போது என story ஆரம்பித்து பின்னோக்கிச் செல்கிறது.
இடையில் கதை மிக மெதுவாகப் போனாலும் பின் பகுதியில் சுவாரஸ்யமாகச் செல்கிறது.
Medical students படித்தால் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம் .
Paige ஒரு millionaire என்று கதை முடிந்து அவரை சிறையிலிருந்து விடுவிக்கிறது.
நினைவில் வைத்துக் கொள்ள முடியாத நிறைய characters, sub stories....
பொறுமையாகப் படித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
Comments
Post a Comment
Your feedback