புன்னை மரச்சோலை, நீர் வளம் சூழ்ந்த தென்னந்தோப்பு , எங்கும் பூக்கள் பூத்துக்குலுங்கும் அவன் ஊரில்.
இரவில் ஒரு நாள் என் கனவில் அவன் வந்தான்.
அவன் என் கனவில் வந்தது இவர்களுக்கெல்லாம் எப்படியோ தெரிந்து விட்டது.
எப்படித் தெரிந்தது?
புன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ்மாந்தை
நன்னாகம் நின்றுஅலரும் நல்நாடன், என்ஆகம்
கங்குல் ஒருநாள் கனவினுள் தைவந்தான்
என்கொல் இவர்அறிந்த வாறு .
(முத்தொள்ளாயிரம்)
புன்னாகச் சோலை - புன்னை மரச் சோலை
புனல்- நீர்
தெங்கு - தென்னை மரம்
சூழ்மாந்தை- சூழ்ந்த அவன் ஊர்(மாந்தை)
நன்னாகம் - நறுமண மலர்கள்
அலரும் - பூத்துக் குலுங்கும்
என்ஆகம் - என்னுடைய
கங்குல் -இரவில்
தைவந்தான்- மெல்ல வந்தான்
என்கொல்- எப்படி
இவர்அறிந்த வாறு - இவர்களுக்குத் தெரியும்?
Comments
Post a Comment
Your feedback