பார்ப்பதை எல்லாம் இறைவனாகவே பார்த்து உருகும் நாவுக்கரசர் ...
உன்னைப் போல் எனக்கு யார் ஆவார்?
உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை.
நான் எதை நினைத்தாலும் அதன் மூலமாக நீயே இருக்கிறாய்.
எல்லா சிந்தனைகளுக்கும் நீயே ஆதாரம்.
நீயே மன்னனானாய்.
மன்னவர்களுக்கு ஓர் அமுதமும் ஆனாய்.
மறைகள் நான்குமானாய்.
அங்கங்கள் ஆறுமானாய்.
பொன்னானாய்.
மணியானாய்.
நான் அனுபவிக்கும் எல்லாவற்றிலும் நீயே அனுபவமும் ஆனாய்.
இந்த பூமியில் நான் புகழத்தக்க ஒன்று உண்டு என்றால், அது நீதான்.
இப்படியெல்லாம் ஆன நீ இன்னும் என்னானாய், என்னானாய் ... என்று எண்ணி எண்ணி நான் வியப்படைவதைத் தவிர நான் உன்னை என்ன சொல்லிப் புகழ்வேன்.
நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்
நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய்
மன்னனாய் மன்னவர்க்கோ ரமுத மானாய்
மறைநான்கு மானாய்ஆ றங்க மானாய்
பொன்னானாய் மணியானாய் போக மானாய்
பூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னை
என்னானாய் என்னானாய் என்னி னல்லால்
ஏழையேன் என்சொல்லி யேத்து கேனே.
(தேவாரம்)
Comments
Post a Comment
Your feedback