ராணுவத்தில் இருக்கும் ஒரு வீரரின் நேர்மையில் சந்தேகம் வந்தாலோ அடுத்தடுத்து தவறுகள் கண்டறியப்பட்டாலோ அவர் ராணுவத்தில் இருந்து நீக்கப்படுவார்.
அப்படி ஒருவரை நீக்க சில நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. நீக்கப்படுபவரது படைப்பிரிவு அணிவகுத்து நிற்க, அந்தப் பிரிவுக்கு முன்பாக அவர் நிறுத்தப்படுவார்.
ட்ரம்ஸ் இசைக்கத் துவங்கும்.
அந்தப் படைப் பிரிவின் அதிகாரி அவர் மேல் சுமத்தப்பட்ட குற்றத்தை படிக்கத் தொடங்குவார்.
தொடர்ந்து ட்ரம்ஸ் முழங்கிய படியே இருக்கும்.
அவரது மிலிட்டரி யூனிபார்மில் இருந்து ஒவ்வொரு முத்திரையாக(insignia) அவரது மிலிட்டரி உடையிலிருந்து கழற்றி எடுக்கப்படும்.
அதன்பின் அந்த ராணுவ வீரர் ராணுவ வளாகத்தில் இருந்து வெளியேற ஆணை பிறப்பிக்கப்படும்.
அவர் வெளியேறும் வரையில் ட்ரம்ஸ் இசைக்கப்படும்.
இது பழைய இங்கிலாந்தில் கடைப்பிடிக்கப்பட்ட மரபு.
"Face the music" என்பது ஒரு ராணுவ வாசகம்.
விளைவுகளை சந்திக்கப் போகிறவரை எச்சரிக்கின்ற ஒரு வாசகம்.
அதாவது 'தண்டிக்கப்படப் போகிறாய்' என்பது அதன் உள்ளார்ந்த பொருள்.
இன்று "Face the music" என்ற இந்த வாசகம் பொதுவான எச்சரிகைக்கான ஆங்கில வாசகமாகப் பயன்பாட்டில் உள்ளது.
If you don't finish this work by tomorrow you will face the music.
I will wait for a day or two. If no progress you have to face the music.
Face the music பற்றி Cambridge dictionary கூறும் விளக்கம் இது.
Face the music: to accept criticism or punishment for something you have done.
Comments
Post a Comment
Your feedback