மனதுக்குள் காதல் வந்த பின் ஒரு பெண் என்னவெல்லாம் செய்வாள்?
1. விழித்திருக்கும் போது நினைவிலும், தூங்கும் போது கனவிலும் அவனையே காண்பாள்.
2. ஏதோ ஒருவகையில் அன்பை வெளிப்படுத்துவாள்.
3.மனதுக்குள்ளேயே பேசிப் பார்த்துக்கொண்டிருப்பாள்.
4.சாப்பிடப் பிடிக்காமல் உடல் மெலிந்து போகும்.
5.அப்படி மெலிந்ததால் ஒரு சோர்வும் கூடவே இருக்கும்.
6.எப்படியாவது அவனைப் பார்க்கவேண்டும் என முயற்சி செய்வாள்.
7.பகல் பொழுதில் வெறுப்பு வரும்.
8.இரவுப் பொழுதில் தூக்கம் வராமல் "இரவு இவ்வளவு நீண்டு கொண்டே போகிறதே" என ஒரு அவஸ்தை இருக்கும்.
9.கனவில் அவனைப் பார்த்து தூக்கத்தில் உளருவாள்.
10. தன் அன்பை அவனிடம் சொல்லலாமா,சொன்னால் தவறாகப் போய்விடுமோ என்று குழம்பி சொல்லாமலேயே மனதுக்குள் வெந்து மெலிந்து விடுவாள்.
11. ஒருதலையாய் இப்படி பெண்ணுக்கு வரும் இந்தக் காதல் உணர்வைத் தான் கைக்கிளை என்கிறது இலக்கியம்.
காண்டல் , நயத்தல் , உட்கோள் , மெலிதல்,
மெலிவொடு வைகல் , காண்டல் வலித்தல்,
பகல் முனிவு உரைத்தல் , இரவு நீடு பருவரல்,
கனவின் அரற்றல் , நெஞ்சொடு மெலிதல்,
பெண்பால் கூற்றுக் கைக்கிளை ஆகும்.
(புறப்பொருள் வெண்பா மாலை)
1.காண்டல்-கனவிலும் நனவிலும் காணுதல்.
2.நயத்தல் - அன்பை வெளிப் படுத்துதல்
3. உட்கோள் - உள்ளத்தோடு பேசுதல்
4. மெலிதல் - உடல் மெலிதல்
5.மெலிவொடு வைகல் - மெலிவோடு சோர்வு
6.காண்டல் வலித்தல்- எப்படியாவது காணவேண்டும் என நினைத்தல்.
7.பகல் முனிவு உரைத்தல் - பகலை வெறுத்தல்.
8.இரவு நீடு பருவரல் - தூக்கம் வராததால் இரவு நீண்டு கொண்டே போகிறதே என்று நினைத்தல்.
9.கனவின் அரற்றல் - கனவில் உளறுதல்
10.நெஞ்சொடு மெலிதல் - மனதோடு புலம்பி மெலிதல்
11.பெண்பால் கூற்றுக் கைக்கிளை - இது ஒரு பெண்ணின் ஒரு தலைக் காதல் .
Comments
Post a Comment
Your feedback