வில்லை வளைக்கும் முன்பாக முதன்முதலாக சீதை
ராமனைச் சில நொடிகள் பார்த்திருக்கிறாள். பிறகு ராமன் வில்லை முறித்தது தோழிகள்
மூலம் சீதைக்குத் தெரியவருகிறது. இப்போது இராமன் வந்து
மணவறையில் வந்து அமர்ந்து இருக்கிறான். தோழிகள் சீதையை அழைத்து வருகிறார்கள்.
சீதைக்கு இராமனின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆவல். எப்படிப் பார்க்க
முடியும்? வெட்கம் ஒரு புறம். எல்லோரும் இருக்கிறார்கள். தலை நிமிர்ந்து
பார்த்தால் கேலி செய்வார்களோ என்ற அச்சம் மறு புறம்.
எய்ய வில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும்.
மெய் விளைவு இடத்து. முதல் ஐயம் விடலுற்றாள்.
ஐயனை அகத்து வடிவே அல புறத்தும்.
கைவளை திருத்துபு கடைக் கணின் உணர்ந்தாள்.
வளையல் அணிந்த கையை உடைய பெண்ணை 'வளையள்' என்று சங்கப்பாடல்கள் கூறும். வளையோடு விளையாடும் கண்ணதாசனின் வரிகள் இவை.
Comments
Post a Comment
Your feedback