Skip to main content

Posts

Showing posts from November, 2024

1 டிசம்பர்

 1 டிசம்பர் 1783: ஹைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட பலூனில் சார்லஸ், எயினி எனும் இருவர் 2 மணி நேரம் பறந்து காண்பித்தனர். வெப்பக் காற்று நிரப்பப்பட்ட பலூனை விட ஹைட்ரஜன் வாயு பலூன் மேலானது என்று இன்று நிரூபிக்கப்பட்டது.  1 டிசம்பர் 1862: உத்திர பிரதேசத்தில் ஆக்ராவில் வானிலை ஆய்வுக்கூடம் திறக்கப்பட்டது.  1 டிசம்பர் 1877: கல்கத்தா வர்த்தகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க இந்தியாவில் முதன்முறையாக வி.பி.பி யில்(V.P.P) பார்சல் அனுப்பும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1 டிசம்பர் 1901: தமிழ் எழுத்தாளர் வை.மு. கோதை நாயகி  அம்மாள் பிறந்த தினம். பெரிய புராணத்தின் முதல் பாடல்- 'உலகெலாம் உணர்ந்து' என்று தொடங்கும்..  சேக்கிழார் பெருமானுக்கு சிவபெருமானே அடியெடுத்துக் கொடுத்ததாக எண்ணப்பட்டு, அதிலிருந்து வந்த வாழ்த்துப் பாடல் இது. உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் .  சேக்கிழார் எப்படி அந்த முதல் அடியைப் பற்றிக்கொண்டாரோ அதே போல் தனக்கும் 'உ, து' வை அமைத்துக் கொண்டவர் வை.மு.கோதைநாயகி அம்மாள். அதை ஒ...

2 டிசம்பர்

2 டிசம்பர் 1873: நியூயார்க் டெய்லி டிராபிக் என்னும் பத்திரிகையில் முதன்முதலாக புகைப்படத்துடன் செய்தி வெளியானது  2 டிசம்பர் 1901:  கிங் காம்ப் கில்லட் என்பவர் ரேசர் பிளேடு தயாரிப்பதற்கான காப்புரிமம் பெற்றார் . 2 டிசம்பர் 1911: நான்காம் தமிழ் சங்கம் நிறுவிய பாண்டித்துரைத் தேவர் காலமானார். தம்மை நாடி வந்த தமிழ்ப் புலவர்களுக்கெல்லாம் வாரி வழங்கி யவர். தமிழின் மேன்மைக்கெனப் பெரும்பொருள் வழங்கி தனியொருவராய் நின்று நான்காம் தமிழ்ச்சசங்கம் ஏற்படுத்திய பெருமைக்கு ரிய இவரின் விரிவான பெயர்  பாலவநத்தம் ஜமீன் வள்ளல் பாண்டித்துரை தேவர் என்பதாகும் .    இவர் காலத்தில் வாழ்ந்த   அரைகுறை ஆங்கிலப்புலவர் ஸ்காட்   பிழையுடன் எழுதி வெளியிட்ட திருக்குறள் புத்தகத்தின்  அனைத்துப்  பிரதிகளையும் விலைகொடுத்து வாங்கி அவற்றை குழியில் போட்டு எரித்தவர் தேவர் .  பிறர் கையில் பிழையான புத்தகங்கள் கிடைக்கக்கூடாது என்பதே  அதற்குக் காரணம்.  ' கப்பலோட்டிய தமிழர் ' வ . உ . சி ., யின் சுதேசிக் கப்பல்  ஓட் டும்  பெரு...

நவம்பர் 28

  நவம்பர் 28: 1939 கூடைப்பந்து விளையாட்டைக் கண்டுபிடித்த அமெரிக்க உடற்பயிற்சி ஆசிரியர் ஜேம்ஸ் . எ . தெரிங் காலமானார் . நவம்பர் 28: 1968 பேமஸ் பைவ்,   தி சீக்ரெட் செவன் முதலான குழந்தைகள் இலக்கியம் படைத்த பெண்ணான   எனிட் பிளைட்டன் லண்டனில் காலமானார் . நவம்பர் 28: 1991 சென்னையில் புதிய மூர்மார்க்கெட் வளாகத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார் .                                

நவம்பர் 27

  நவம்பர் 27 : 1754 இன்றைய   முக்கோணவியலுக்கு   ( Trigonometry ) அ டி த்தளம் அமைத்த பிரெஞ்ச் கணித மேதை ஆப்ரஹாம் டிமாங்ரா லண்டனில் காலமானார் . நவம்பர் 27 : 1978 ‘ கின்னஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ’ ஆசிரியர் ராஸ்மாக் விர்ட்டரும் அவரது இரட்டை சகோதரரும் ஐரீஷ் தீவிரவாதிகளின் குண்டு வீச்சில் பலியானார்கள் . நவம்பர்  27 : 2008   பாரத முன்னாள் பிரதமர்  வி. பி. சிங் மறைந்த நாள்.  அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி தலைமையிலான  அரசில்  நிதி அமைச்சராகவும் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்தவர். அவர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது தான் போபோர்ஸ் பீரங்கி ஊழலில் ராஜிவ் காந்தி சம்பந்தப்பட்டுள்ளார் என்றும் அந்த ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் அறிவித்தவர் இவர். அதன் காரணமாக  ராஜிவ் காந்தியைத்  தோற்கடித்து    சில காலம் பிரதமராக இருந்தார். உடல்நலக் குறைவின்  காரணமாக  27-11-2008 அன்று மரணமடைந்தார்.   

நவம்பர் 26

  நவம்பர் 26:   1832 நியூயார்க் நகரில் ஜான் மேலன் என்பவரால் ட்ராம் வண்டி அறிமுகப்படுத்தப்பட்டது . நவம்பர் 26:   1947 சுதந்தர இந்தியாவின் முதல் பட்ஜெட் நிதி அமைச்சர் ஆர் . கே . ஷண்முகம் செட்டியாரால் சமர்ப்பிக்கப்பட்டது . நவம்பர்  26:    1954   தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த நாள்.  தமிழர்களின் தலைவர் என்று கருதப்பட்ட போதும் அதிகாரப் போட்டியின் காரணமாக சக தமிழ்ப் போராளிகளைக் கொன்ற பழிக்கு ஆளானார்.   முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் திட்டமிட்ட படுகொலைக்குப் பிறகு இந்தியாவில் இவரது இயக்கம் பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்டது. இந்தக் கொலைக்குற்றத்தில் தேடப்படும் குற்றவாளியாக இருந்தபோது 2009 மே மாதம் 17 ஆம் தேதி இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டார்.  அந்த மாதமே அவரது குடும்பத்தில் அனைவரும் இறந்துவிட்டதாகவும் விடுதலைப்புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டதாகவும் இலங்கை அரசு அறிவித்தது.   நவம்பர் 26:   1965 இந்தி ஆட்சி மொழியானது .  

மறைவும் பிறப்பும் ...

  குழந்தைப் பருவத்தை அடுத்து   பாலப் பருவம் வருகிறது.     குழந்தைப் பருவத்தின் மறைவு தான் பாலப்பருவம்.  அந்த பாலப்பருவம்   மறைந்து   காளைப்பருவம் வருகின்றது.  அதுவும்   மறைந்து    இளமைக்காலம் வந்தடைகின்றது.  அதுவும் நீடிக்காமல் செத்து முதுமைப்பருவம் சீக்கிரமே வந்துவிடுகின்றது.  இப்படி   மனித வாழ்விலே நமக்குள்ளேயே பல சாவுகளை பல கட்டங்களில் சத்தித்த போதும் நாம் அழுவதில்லை.    ஆனால் பிறர் இறந்து விட்டால் உடனே அழுகின்றோமே இது மடமைத்தனம் அல்லவா?   பாளையாம் தன்மை செத்தும்    பாலனாம் தன்மை செத்தும் காளையாம் தன்மை செத்தும்    காமுறும் இளமை செத்தும் மீளும்இவ் இயல்பும் இன்னே    மேல்வரு மூப்பும் ஆகி நாளும் நாள் சாகின்றாமால்    நமக்கு நாம் அழாதது என்னோ! (குண்டலகேசி)

நவம்பர் 15

  நவம்பர்   15: 1673 உடலிலுள்ள சுரப்பிகளைப் பற்றிக் கூறியவரும் தைராய்டு சுரப்பிக்கு ‘ கவசம் ’ என்னும்   பொருள்படும் கிரேக்கச் சொல்லான ‘ தைரோஸ் ’ என்பதை மூலமாகக் கொண்டு ‘ தைராய்டு ’ என்னும் பெயரைச் சூட்டியவருமான பிரிட்டிஷ்   மருத்துவயியலாளர் தாமஸ் வார்ட்டன் லண்டனில் காலமானார் . நவம்பர்  15: 1896 ‘ தி போனோஸ்கோப் ’ என்னும் முதல் சினிமா பத்திரிகை நியூயார்க்கிலிருந்து வெளிவரத் தொடங்கியது . நவம்பர்   15: 1913 இலக்கியத்திற்கான நோபல் பரிசு ரவீந்திரநாத்   தாகூருக்கு வழங்கப்படுவதாக இன்று   கல்கத்தாவிற்குச் செய்தி எட்டியது .   அவருடைய ‘ கீதாஞ்சலி ’ என்ற நூலுக்காக இப்பரிசு கிட்டியது .   ஆசியாவிலேயே முதன் முதலாக நோபல் பரிசைப் பெற்றவர் இவர்தான் . நவம்பர்  15: 1917 சமூகவியலின் தந்தை என்று போற்றப்படும் பிரெஞ்ச் சமூகவியலாளர் எமிலி டர்க்ஹெயாம்   பாரிஸ் நகரில் காலமானார் . நவம்பர்   15: 1920 பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிகையின் துணை ஆசிரியரானார் . நவம்பர் 15: 1921 கு...

நவம்பர் 14

  நவம்பர் 14: 1957 ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை ‘ குழந்தைகள் தினமாக ’ கடைப்பிடிக்க வேண்டுமென்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது . நவம்பர் 14 :1964 இந்தியாவில் முதன் முதலாக நினைவு நாணயம் வெளியிடப்பட்டது .   நேருவின் நினைவாக வெளியான இந்த நாணயத்தில் அவரது தலை உருவம் பொறிக்கப்பட்டது . நவம்பர்  14 :1977   பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா மறைந்த தினம்.  இஸ்கான் (ISKCON) எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை நிறுவியவர் ஆவார். உலகெங்கும் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்கின்ற பக்தி முழக்கமும் தியானமும் பரவ இவர் தான் முக்கியமான காரணம்.  உலகிலேயே பக்திநூல்களை யாரும் நினைத்துப் பார்க்க முடியாத குறைந்த விலையில் தருவது இந்த இயக்கம் தான்.  நவம்பர் 14: 1985 டில்லியில் தொலைக்காட்சி ‘ டெலி டெக்ஸ்ட் சர்வீஸ்’ தொடங்கப்பட்டது . நவம்பர் 14: 1989 நேருவின் 100 ஆவது பிறந்த தின விழாவில் இந்திய விளையாட்டுத்துறை ‘ பாரதியம் ’ என்னும்   ஒரு நிகழ்ச்சியை நேரு விளையாட்டரங்கில் நடத்தியது .   50000 சிறுவர் சிறுமிகள் ஒரே நே...

நவம்பர் 13

  நவம்பர் 13 :1665 ஐசக் நியூட்டன்   Method of Flouxions   என்ற தன் கால்குலஸ் பற்றிய நூலை வெளியிட்டார் . நவம்பர் 13 :1922 தமிழ் நாடக உலகின் தந்தை என்று போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் காலமானார் .   நவம்பர்  13 :1935   பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி  பி.சுசீலா பிறந்த நாள்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்படப் பல இந்திய மொழிகளில் நாற்பதாண்டுகளாக 25,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளவர் இவர்.

நவம்பர் 12

நவம்பர் 12: 1859 பாரிசில் ஒரு சர்க்கசில் முதன் முதலாக ஜீல்ஸ் லியோடார்ட் என்பவர் பறக்கும் ஊஞ்சலில்   ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்குத் தாவி மக்களை வியக்க வைத்தார் . நவம்பர்  12: 1896 பறவைகள்  ஆராய்ச்சியாளரான சலீம் அலி பிறந்த நாள்.  பறவைகளின் வாழ்க்கையைப் பற்றியும், பழக்க வழக்கங்கள் குறித்தும் இவர் வெளியிட்ட கட்டுரைகளும், நூல்களும் உலகப் புகழ் வாய்ந்தவை. பறவைகளின் நல்வாழ்வும், பாதுகாப்பும், இயற்கைப் பாதுகாப்போடு பின்னிப் பிணைந்தவை என்ற அடிப்படை விஷயத்தை எப்போதும் வலியுறுத்திவந்தவர் இவர்.  Handbook of the Birds of India and Pakistan  என்ற தொகுப்பும்  ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி (The Fall of Sparrow) என்ற தன்வரலாற்று நூலும் சலிம் அலி எழுதிய முக்கிய நூல்களாகும். ஜூலை 27, 1987 இவர் மறைந்த நாள்.  நவம்பர் 12: 1920 எழுத்தாளர் வல்லிக்கண்ணன் பிறந்த நாள் . நவம்பர் 12: 1946 காசி இந்து பல்கலைக் கழகத்தை உருவாக்கிய பண்டித மதன் மோகன் மாளவியா காலமானார் . நவம்பர் 12: 1984 ராஜிவ் காந்தி காங்கிரஸ் தலைவராகத் ...

அபிதான சிந்தாமணி

      சீவக சிந்தாமணி, விவேக சிந்தாமணி என்பது போல, அபிதான சிந்தாமணி எளிதில் படிக்கக் கூடிய புராணக் கதையோ அல்லது இதிகாச நூலோ அல்ல.      பல துறைகளைச் சேர்ந்த சொற்களுக்கு விளக்கம் கூறி விளங்கச் செய்யும் கலைக் களஞ்சியம் தான் அபிதான சிந்தாமணி.        அபிதான சிந்தாமணி என்னும் இந்நூலின் ஆசிரியர் ஆ.சிங்கார வேலு முதலியார். இவர் பிறந்த ஊர் பொன் விளைந்த களத்தூருக்கு அருகில் உள்ள ஆலூர். பிறந்த ஆண்டு 1855. இவர் பிறந்த தேதி, மாதம், தாய் - தந்தை பற்றிய விவரங்கள் அறியக் கிடைக்கவில்லை.        இந்நூலின் முதல் பதிப்பு வெளியான 1910-ஆம் ஆண்டில் சிங்கார வேலு முதலியார் சென்னை - பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார்.  1050 பக்கங்கள் கொண்ட இந்நூல் தான் தமிழ் மொழியில் வெளியான முதல் கலைக் களஞ்சியம். பாண்டித்துரைத் தேவர் முயற்சியால் மதுரை தமிழ்ச்சங்கம் வெளியிட்டது. சிங்கார வேலு முதலியார் இந்நூலுக்கு "சர்வார்த்த சித்தி' என்னும் பெயரை வைத்திருந்தார். இந்நூல் கையெழுத்துப் பிரதியாக இருந்த போது இதற்க...