பேசும் பாஷையிலே பேச முடியாத மிருகத்துக்கும், பேசத் தெரிந்த மனிதனுக்கும் உள்ள வித்தியாசங்களின் எல்லைகள் எங்கே ஒழிந்து கொண்டிருக்கின்றன என்று நான் ஆச்சரியப்படுவதுண்டு.
உலகத் தொடக்கத்தில் இருந்த எந்த சொர்க்கத்தின் வழியாக, சிருஷ்டியின் எட்டாத காலம் முதல் மனித இதயமும் மிருக உள்ளமும் மிக எளிய முறையில் கலந்து உறவாட ஆரம்பித்தன?
இரு ஜந்துக்களுக்கும் உள்ள மனத் தொடர்பு மறக்கப்பட்ட நிலையிலும் அவர்களுடைய தொடர்ந்த நடைப் பழக்கம் இன்னும் அழியவில்லையே.
இருந்தாலும்,
திடீரென்று சொல்லற்ற இசையில், மங்கிய ஞாபகசக்தி எழுந்து நின்று பேசுகிறது.
அந்த மிருகமும் மனிதனுடைய முகத்தைப் பார்த்து அன்பு கலந்த நம்பிக்கையுடன் பழகுகிறது;
மனிதனும் அன்பு கலந்த ஆச்சரியத்துடன் அதன் கண்களையே பார்த்து நிற்கிறான்.
இந்த இருவரும்,
மாற்றுடடிலே,
நண்பர்களாகவே சந்திக்கிறார்கள்.
உடல் வேறு என்றும்
உள்ளம் ஒன்று என்றும்,
மிக மங்கலான சிந்தனையுடன் தான் உணர்கிறார்கள்.
-Rabindranath Tagore
( in Tagore poems)

Comments
Post a Comment
Your feedback