செப்டம்பர் 30,
1687:
ஒளரங்கசீப் கோல் கொண்டாவைக் கைப்பற்றினார்.
செப்டம்பர் 30, 1902:
செயற்கைப் பட்டு உற்பத்திக்கான காப்புரிமை அமெரிக்க விஞ்ஞானிகள் வில்லியம் வாக்கர், ஆர்தர் லிட்டில் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
செப்டம்பர்
30,1910:
பிளேக் நோயால் ஒரே ஆண்டில் நாலரை லட்சம் பேர் இறந்துவிட்டதாக அரசு அறிக்கை வெளியானது.
செப்டம்பர்
30,1922:
இத்தாலியில் முஸோலினி பாசிஸ்ட் அரசை அமைத்தார்.
செப்டம்பர் 30,
1929:
பிரிட்டனில் பி.பி.சி தினசரி தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கியது.
செப்டம்பர் 30,
1957:
பி.பி.சி தொலைக்காட்சியில் உலகிலேயே முதல் பெண் செய்தி வாசிப்பாளராக ஆர்மைன் ஸ்டாண்ட் போர்ட் என்னும் பெண் செய்தி வாசித்தார்.
செப்டம்பர்
30,1993:
மகாராஷ்ட்ராவில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டது.
12000 பேர் பலியானார்கள். மரத்வாடா பகுதியில் 80 சதவீதம் வீடுகள் தரைமட்டமாயின. தமிழகத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
செப்டம்பர் 30,
1993:
தமிழகத்தின் 23 ஆவது மாவட்டமாக விழுப்புரம் மாவட்டம் உதயமானது.

Comments
Post a Comment
Your feedback