பழங்காலத்தில் பெண் குழந்தைக்குப்
பாலுண்ணும் பருவத்தில் கால்களில் சிலம்பணிவிப்பார்கள். இப்பெண் வளர்ந்து கன்னியாக இருக்கும் வரை
சிலம்பு அணிந்திருப்பாள். திருமணம்
நிச்சயிக்கப்பட்ட பின் திருமணத்திற்கு முன்பாக சிலம்பை அகற்றும் விழா
நடக்கும். அந்நாளில் இது ஒரு சமுதாய மரபாகக் கடைபிடிக்கப்பட்டது. இதுவே சிலம்பு கழி நோன்பு என்ற விழாவாக
நடத்தப்பட்டது.
பொதுவாக சிலம்பு கழி நோன்பு மணமகன்
அல்லது மணமகள் இல்லத்திலும் திருமண விழா மணமகள் வீட்டிலும் நடந்தது.
மணமகன்
வீட்டில் சிலம்பு கழி நோன்பு நடந்தாலும் திருமணம் என் வீட்டில் நடக்க வேண்டும் என
பெண்ணின் தாய் கூறுவதை,
நும்மனைச்
சிலம்பு கழீஇ யயரினும்
எம்மனை வதுவை
நன்மணம் கழிக (ஐங்குறுநூறு: பாடல் 399)
என்ற வரிகளால் அறியலாம்.
காலில் சிலம்பு இல்லை என்றால் மணமான பெண் என
அர்த்தம்.
மனிதம்..
ReplyDeleteமறந்து..
போன..
மரபுகள்...!!!