“கற்பித்தலைப் பற்றி எங்களுக்குச் சொல்” என்று ஒரு ஆசிரியன் கேட்டான்.
அவன் சொல்லத் தொடங்கினான்.
உங்களின்
அறிவு மலர்ச்சியில் அரைத் தூக்கத்தில் இருக்கிற உங்களின் அறிவை உங்களுக்குக் காட்டுவதை
உங்களைத் தவிர வேறு யாரும் செய்ய முடியாது.
ஒரு நல்ல
ஆசிரியன் ஆலயத்தின் நிழல் போல –
அவன் தன்
சீடர்களுக்குக் கொடுப்பது அவன் அறிவையல்ல... மாறாக அவனுடைய நம்பிக்கைகளையும்
நேசங்களையுமே அவன் கொடுக்கிறான்.
நல்ல ஆசிரியன்
அவனுடைய அறிவின் வீட்டிற்கு உங்களை அழைத்துச் செல்லமாட்டான். மாறாக உங்களுடைய சிந்தனையின் வாயிலுக்கு உங்களை
வழிநடத்துவான்.
விண்வெளியில்
தான் கண்டு கொண்டதை விஞ்ஞானி உங்களுக்குச் சொல்லலாம். ஆனால் அவன் புரிந்து கொண்டதை அப்படியே
உங்களுக்குக் கொடுக்க முடியாது.
இசைஞானி உலகத்தின்
இசைவடிவங்களை இசைத்துக் காட்டலாம். ஆனால்
ஞானத்தையோ குரலையோ உங்களுக்குக் கொடுக்க முடியாது.
கேட்பவர்களின்
காதுகளைக் கட்டிவைக்கும் நுட்பத்தைக் கற்றுத் தரமுடியாது.
அறிவியல், கணக்கில் அவன் எடையை, அளவைக் கற்றுத் தரலாம். அதற்கும்
அப்பால் உள்ள ஞானத்தை எப்படிக் கற்றுத் தர முடியும்?
ஏனென்றால்
ஒருவனின் கூர்ந்த அறிவின் மூலம் இன்னொருவனுக்கு இறக்கைகளைக் கொடுக்க
முடியாது.
ஆண்டவனின்
அறிவின் திளைப்பில் எல்லோரும் தனித்தனி தான்.
கடவுளைப்
பற்றிய அறிவாகட்டும்; பூமியைப் பற்றி
புரிதலாகட்டும் -ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி தான்.
Comments
Post a Comment
Your feedback