செப்டம்பர் 17,1879:
ஈ. வெ. ரா (ஈரோடு வெங்கடப்பா இராமசாமி நாயக்கர்) பிறந்த நாள். பெரியார் என்ற அடைமொழியால் அறியப்படுபவர் இவர்.
செப்டம்பர் 17,1915:
இந்தியாவின் தலைசிறந்த ஓவியர்களுள் ஒருவரான எம்.எப்.ஹுசைன் பிறந்த நாள்.
செப்டம்பர் 17,1930:
வயலின் இசைக் கலைஞர் லால்குடி ஜெயராமன் பிறந்த நாள்.
செப்டம்பர் 17,1950:
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள்.
செப்டம்பர் 17,1953:
திரு.வி.க மறைந்த நாள்.
ஏழைத் தொழிலாளிக் கென்றும் துணைநின்று
வாழுந்தமிழின் வளம் பெருக்கி - ஊழியங்கள்
செய்யப்பிறந்த திருவிக சென்றடைந்தான்
தையலொரு பாகனிரு தாள் .
(திரு.வி.க மறைவின் போது கவிமணி எழுதியது)
செப்டம்பர் 17, 1953:
செப்டம்பர் 17, 1979:
நகைச்சுவை கலந்த வில்லன் நடிப்பில் புகழ் பெற்றவராக விளங்கிய எம். ஆர். ராதா மறைந்த நாள்.
சிறு வயதிலேயே வீட்டைவிட்டு ஓடி வந்து ரயில் நிலையத்தில் மூட்டை தூக்கும் போர்ட்டராக வேலை செய்தவர். நாடக வாய்ப்புக் கிடைத்த போது தன் திறமையால் புகழ் பெற்ற நடிகர்களுள் ஒருவரானார்.
எம். ஜி.ஆரை அருகிலிருந்து சுட்டவர் இவர். அந்தக் கொலை முயற்சி வழக்கில் சில ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
விடுதலையான பிறகு அவர் நடித்த ரத்தக்கண்ணீர் இன்றளவும் பேசப்படும் படமாக விளங்குகிறது.
நடிகர் ராதா ரவி, நடிகைகள் ராதிகா, நிரோஷா ஆகியோரின் தந்தை இவர்.
செப்டம்பர் 17,1997:
சேலத்தில் இன்று தான் பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
செப்டம்பர் 17, 2004:
இன்று மத்திய அரசால் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.


Comments
Post a Comment
Your feedback