ஜூலை 30,1886
மருத்துவரும் விடுதலைப் போராட்ட வீரருமான முத்துலட்சுமி ரெட்டி பிறந்த நாள்.
ஜூலை 30,1913
நில அதிர்வு வரைவியைக் (Seismograph) கண்டுபிடித்த ஜான் மில்னி இங்கிலாந்தில் இன்று காலமானார்.
ஜூலை 30,1914
தமிழறிஞர் மற்றும் உரையாசிரியர் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் ஆனந்த வருடம் ஆடி மாதம் 15ஆம் நாள் வியாழக்கிழமையான இன்று மறைந்த நாள்.
ஜூலை 30,1924
எழுத்தாளர் மா. நன்னன் பிறந்த நாள்.
ஜூலை 30,1958
தமிழக எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் பிறந்த நாள்.
ஜூலை 30, 2025
மருத்துவத் துறையில் இன்று ஒரு புதிய ரத்த வகை கண்டுபிடிக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது பெண்ணுக்கு இது வரையுள்ள எந்த ரத்தவகையிலும் சேராத ஒரு புது ரத்த வகை அமைந்துள்ளதை இன்று மருத்துவர்கள் கண்டனர். இந்த வகை ரத்தத்துக்கு CRIB என்று பெயரிட்டுள்ளனர். CR என்பது CROMER என்பதையும் IB என்பது INDIA BENGALURU என்பதையும் குறிக்கிறது.
Comments
Post a Comment
Your feedback