ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் சிறியதாகவாவது ஏதேனும் ஒரு துன்பம் வருகிறது.
நமக்கு நேரும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் நாம் நம்மை தனித்தனியே பாதுகாத்துக்கொள்ள வேண்டுமா?
அல்லது ஒரே விதமான அணுகுமுறையில் எல்லாப் பிரச்னைகளையும் தீர்க்க முடியுமா?
எது சரியான முறை?
யாரோடும் நாம் கோபப்படாமல் இருக்க வேண்டும்.
அறிவில் தெளிந்தவர்கள் யாரும் நம் மேல் கோபப்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
எல்லா நிலங்களிலும் வளரும் அருகம்புல் நெல் வயலில் வளர்வதில்லை. காரணம் நெல் முனைப்பாக வளர முயற்சிப்பதால் புல் நுழைய முடிவதில்லை.
நம் வேலையில் கவனம் தான் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு.
இதை விட சரியான தீர்வு எதுவுமில்லை.
உற்றதற் கெல்லாம் உரம்செய்ய வேண்டுமோ?
கற்றறிந்தார் தம்மை வெகுளாமைக் காப்பமையும்
நெற்செய்யப் புல்தேய்ந்தாற் போல நெடும்பகை
தற்செய்யத் தானே கெடும்.
(முன்றுறை அரையனார் - பழமொழி 83)
Its useful
ReplyDelete