ஒருவர் செய்த நல்ல செயலை நேராக அவர் கண்ணைப் பார்த்து நல்லபடியாகக் கூற நமக்கு நாக்கு தடுமாறுகிறது.
சரியான வார்த்தைகள் கிடைக்காமல் ஏதோ பாராட்டுகிறோம்.
ஆனால் அவர் ஏதாவது ஒரு செயலைச் சரியாகச் செய்யவில்லை என்றால் அதைச் சுட்டிக்காட்டும் போது இலக்கண சுத்தமாக அறிவுரை சொல்ல முடிகிறது.
இந்த நாக்குக்கு மட்டும் இந்த கெட்ட குணம் எப்படி வந்ததோ!
கணமலை நன்னாட! கண்ணின்று ஒருவர்
குணனேயும் கூறற்கு அரிதால் - குணன் அழுங்கக்
குற்றம் உழைநின்று கூறும் சிறியவர்கட்கு
எற்றால் இயன்றதோ நா.
(நாலடியார்)
Comments
Post a Comment
Your feedback