சிவகாமியின் சபதம் நாவல் படித்தவர்கள் மனதில் இந்தப் பாடல்
ஆழமாகப் பதிந்திருக்கும்.
சிவகாமி தன் வாழ்க்கையில் கடைசியாக நடனம் ஆடியது இந்தப் பாடலுக்குத் தான்.
இது ஒரு தேவாரப் பாடல்.
கடவுளையே காதலனாக நினைத்து அவனுக்காக தன் வாழ்க்கையைத் துறக்கும் ஒரு பெண் பாடுவதாக அமைந்த பாடல் இது.
இந்தப் பாடல் கதையோடு பொருந்திப் போய் விடுவதும் படிப்பவர்கள் மனதில் பதிந்து விட ஒரு முக்கியமான காரணம்.
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர்கேட்டாள்
பெம்மான் அவனுக்கே பிச்சியானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றேநீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங்கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன்தாளே!
(தேவாரம்)
அவனை அவளுக்குத் தெரியாது.
முதலில் அவன் பெயரைத் தான் கேள்விப்படுகிறாள்.
சில நாள் போன பின் அவனுடைய அருமை பெருமைகளைக் கேட்டாள்.
அதன் பிறகு அவன் இருக்கும் இடத்தைப் பற்றிக் கேள்விப்படுகிறாள்.
அப்புறம் அவன் மேல் பைத்தியமாக ஆகிறாள்.
தன் தாய் தந்தையைக் கூட மறந்து விடுகிறாள்.
தான் அன்றாடம் செய்யும் வேலைகளைக் கூட மறந்தாள்.
தன் பழக்க வழக்கங்களையும் மறந்தாள்.
தான் யார் என்பதையும் மறந்தாள்.
தன் பெயரையும் மறந்தாள்.
அவனையே நினைத்து அவன் பாதங்களைச் சரணடைந்தாள்.
Comments
Post a Comment
Your feedback