Skip to main content

குழந்தை குறித்த கேள்வியும் டாக்டர் பதிலும் -1


தன் குழந்தை குறித்து ஒரு தந்தை குழந்தை நல மருத்துவரிடம் கேட்ட கேள்வியும் அதற்கு மருத்துவர் கூறிய விளக்கமும்.


குழந்தையின் தந்தையின் கேள்வி:

    நாலரை வயதான என் மகள் மிக அறிவுக் கூர்மையும் ஆராயும் தன்மையும் உள்ளவள். படிப்பில் சிறந்து விளங்குகிறாள். ஆனால் அவள் எது செய்தாலும் தன் இஷ்டப்படி தான் செய்வாள். யாரும் அவளை எதையும் செய்யுமாறு அறிவுறுத்ததோ கட்டாயப்படுத்தவோ முடியாது. அருமையாக கதை சொல்லவும் ரசிக்கக் கூடிய வகையில் தன் கற்பனையை விவரிக்கவும் அவளால் முடியும். அவளுக்கு விருப்பம் போல் கதைகளைச் சேர்த்துச் சொல்லுவாள். அவள் முடிவில்லாமல் இவ்வாறு சொல்லுவது சில சமயங்களில் அவள் பொய் சொல்வது போல இருக்கும். இது அவளுக்கு வீட்டிலும் வெளியிலும் குறிப்பாக பள்ளியிலும் பிரச்சினை தருகிறது. என்ன நடக்கிறது என்று தந்தையாகிய எனக்குப் புரியவில்லை. ஓரிரு நாட்களுக்கு பிறகு தான் நடந்த உண்மை எங்களுக்கு தெரிகிறது. பொதுவாக பெரிதாக ஏதும் இருக்காது. ஆனால் அவள் அதைக் குழப்பி விடுகிறாள். அவள் தாயிடம் கூட நடந்ததைக் கூறுவதில்லை. அதற்குப் பதில் கதைகள் கட்டுகிறாள். அது பொய் என மற்றவர்கள் சொல்கிறார்கள். தயவுசெய்து ஆலோசனை கூறுங்கள்.


டாக்டரின் பதில்.


    நிஜத்துக்கும் கற்பனைக்கும் பல சமயங்களில் குழந்தைகளுக்கு வித்தியாசம் தெளிவாகத் தெரியாது. அதாவது பார்ப்பதற்கும் கற்பனைக்கும் வேறுபாடு தெரியாது. இது அவர்களுக்கு சிறிது குழப்பமாக உள்ளது. ஆனால் இதை 'பொய்' என்று கருதக்கூடாது. உங்கள் குழந்தை பேசுவதெல்லாம் தன்னுடைய லாபத்துக்காக அல்ல என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். ஒரு குழந்தை தன் தோழியின் பென்சிலை எடுத்து வந்து "அது மாமா தனக்குத் தந்த பிறந்தநாள் பரிசு" என்று கூறினால் அது பொய். ஆனால் ஒரு குழந்தை தன் தோழிகளிடம் "தன் வீட்டு விழாவில் 20 நண்பர்கள் வந்தார்கள்" எனக் கூறினால் இதை பொய் என்று கருதக்கூடாது. இது கற்பனை ஆசை எனக் கூறப்படுகிறது. என்ன நடக்க வேண்டும் என குழந்தை விரும்பியதோ அதைக் கூறுகிறது என்று பொருள். நாம் மந்திர தந்திரக் கதைகளை குழந்தைகளுக்குக் கூறுகிறோம். இந்தக் கதைகளை உள்வாங்கி, தானே அத்துடன் கதை கட்டிப் பேசுவதும் சாத்தியம். பல குழந்தைகள் இப்படிச் செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அறிவுக் கூர்மையும் பேச்சாற்றலும் உள்ள குழந்தைகள் தம் கதைகள் பெரியவர்களின் கவனத்தை ஈர்க்கின்றன என்று தெரியும்போது இன்னும் கதை கட்டிக் கொண்டே செல்வார்கள். இதைப் பெரிதுபடுத்தாமல் இது உண்மையில் நடந்ததுதானா என்று குழந்தையை விவரிக்கக் கேளுங்கள். ஆனால் பொய் என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம். அவளே அந்தக் கதையைக் கட்டினாளா எனக் கேளுங்கள். அதற்காக மகிழ்ந்து அவளுடன் சிரித்து விடுங்கள். எனினும் அவளுக்கு உண்மையில் நிகழ்ந்ததைக் கூறும் போது கூர்ந்து கவனியுங்கள். 


    அங்கிள் டாம்ஸ் கேபின் (Uncle Tom's Cabin) என்னும் புகழ்பெற்ற கதையில் ஒரு குழந்தை எப்போதெல்லாம் தன் திருட்டை ஒப்புக்கொள்கிறாளோ அப்போது அவளுக்கு பாராட்டும் பரிசும் கிடைக்கும். இதனால் அவள் தான் எடுக்காததையும் கூட எடுத்ததாக ஒப்புக்கொள்கிறாள். குழந்தைகள் உங்களுடைய நேரத்தையும் அங்கீகாரத்தையும் விரும்புகிறார்கள். நீங்கள் தெரிந்தே அவளுடன் அதிக நேரம் செலவழித்தால் உங்கள் கவனத்தை ஈர்க்க அதிசய கதைகள் சொல்ல வேண்டியதில்லை என்பதை அவள் உணர்வாள். ஓவியம் தீட்டுதல், காகிதக் கப்பல் செய்தல், காய்கறிகளைக் கொண்டு பொம்மைகள் செய்தல் என சேர்ந்து செய்யக்கூடிய பல வேலைகள் உள்ளன. "வியப்பளிக்கக்கூடிய பல அம்சங்கள் நம் வாழ்க்கையில் உள்ளன. எறும்பு, வண்ணத்துப்பூச்சி, அந்தி நேரத்து வானம் போன்றவை போல. வேறு கற்பனைக் கதைகள் தேவையில்லை" என மாண்டிசோரி அம்மையார் கூறியுள்ளார். கல்வியாளர்கள் அனைவரும் இதை ஏற்பதில்லை என்றாலும் குழந்தைக்கு ஏற்றதை நாம் தேர்வு செய்ய வேண்டும். மாண்டிசோரி கல்வி முறையில் சிறுசிறு வீட்டு வேலைகளில் குழந்தையை உதவி செய்யக்கேட்பது நல்லது எனக் கூறப்படுகிறது. தன் கைக் குட்டையை துவைப்பது கூட நான்கு வயதுக் குழந்தைக்கு உதவியான செயல். 


 குழந்தைகள் இத்தகைய நிலையை பொதுவாக கடந்துவிடுவார்கள். ஆனால் எதிர்காலத்தில் எந்தப் பிரச்சினையும் வராமல் இருக்க இதைப்பற்றி நீங்கள் கவனமாக இருப்பதும் சரிதான்.

( Courtesy: NDTV)

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...