தமிழ்நாட்டில் கோவையில் வியக்கத்தக்க விசயங்களைக் சாதாரணமாகச் செய்துகாட்டிய ஒரு மேதை இருந்தார். ஹிட்லரைச் சந்தித்த பெருமைக்குரியவர் அவர்.
அவர் G.D நாயுடு.
ஒரு முறை அவர் கப்பலில் ஜெர்மனிக்குப் பயணமாகும் போது கப்பல் தீப் பற்றிக்கொண்டது. தீ மளமளவென நாலாபுறமும் பரவ கப்பலில் இருந்தவர்கள் உயிர்தப்ப கடலில் குதித்தனர். கடலிலோ சுறா மீன்கள். குதித்தவர்களில் பலர் சுறாவுக்கு இரையாகிப் போனார்கள். உயிர் தப்பிக்க முடியும் என்ற நம்பிக்கை கொஞ்சமுமில்லை. ஆனாலும் இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று தீயில் மாய்வது மற்றொன்று கடலில் விழுந்து சுறா வுக்கு இரையாவது.
தீயை விட கடலே பரவாயில்லை என்று முடிவு செய்தார். கடலில் குதித்தார்.
இப்படி இரண்டு அபாயகரமான வாய்ப்புகள் மட்டும் தான். அதில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டிய நிலையை ஆங்கிலத்தில்
Between the devil and the deep blue sea
என்பார்கள்.
ஐயோ, அதெல்லாம் இருக்கட்டும் கடலில் குதித்தவருக்கு என்ன நடந்தது?
கடலில் குதித்த பின் அவரைச் சுற்றிலும் இருந்த சுறா மீன்கள் எதுவும் G.D. நாயுடுவை ஒன்றும் செய்யவில்லை. காப்பாற்றப்படும் வரை எந்தக் காயமும் இல்லாமல் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.
உயிர் பிழைத்த இந்த அதிசயத்தைப் பற்றிக் கூறும் போது "நான் வாழ்நாள் முழுவதும் அசைவ உணவு உண்டதில்லை. எந்த உயிரையும் கொல்லாததால் தானோ என்னவோ சுறா மீன்கள் என்னை உயிர்பிழைத்துப் போகட்டுமென்று விட்டுவிட்டன" என்று கூறினார் நாயுடு.
மீண்டும் Between the devil and the deep blue sea க்கு வருவோம்.
நெருக்கடியான நேரத்தில் இரண்டு சங்கடமான வாய்ப்புகளில் ஒன்றைத் தேர்வு செய்தே ஆக வேண்டும் என்ற நிலையைக் குறிக்க Between the devil and the deep blue sea என்பார்கள்.
Between the devil and the deep blue sea என்பதற்கு dictionary தரும் பொருள் என்ன?
If you say that you are between the devil and the deep blue sea, you mean that you are in a difficult situation where you have to choose between two equally unpleasant courses of action.
Example for the usage:
My wife asked me to select one of the two silk sarees. I am caught between the devil and the deep blue sea.
For a pleasant feel you should not use 'between the devil and the deep blue sea'.
I know that. You only didn't know the cost of the sarees. If you see the price tag you will agree my point.
Comments
Post a Comment
Your feedback