Skip to main content

Posts

Showing posts from April, 2023

10 Public April 2023- Social Science

  Go back to main page

பாட்டும் தொகையும்

  பதினெண்மேற்கணக்கு நூல்கள் எட்டுத்தொகை பத்துப்பாட்டு எட்டுத்தொகை: நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்  பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம் புறம் என்று இத்திறத்த எட்டுத் தொகை. (பன்னிரு பாட்டியல்) அக நூல்கள் ஐந்து: நற்றிணை , ஐங்குறுநூறு ,குறுந்தொகை ,கலித்தொகை ,அகநானூறு. புற நூல்கள் இரண்டு: பதிற்றுப்பத்து, புறநானூறு அகமும் புறமும் கலந்த நூல்: பரிபாடல் நற்றிணை: 1.       நன்மை+திணை=நல்+திணை=நற்றிணை 2.        நற்றிணை  ஓர் அக நூல். 3.       175 புலவர்கள் பாடிய 400 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 4.       அடி வரையறை: 9   அடி முதல் 12   அடி வரை 5.       தொகுத்தவர் இன்னார் என தெரியவில்லை . 6.       தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி. 7.       இதன் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் 8.   ...

10 Public April 2023- Science

  Go back to main page

நடக்கட்டும் தமிழ்ப் புத்தாண்டு!

  புண்ணியம் செழிப்பதாக பொய்மைகள் தொலைவதாக கண்ணியம் தழைப்பதாக கடமைகள் உயர்வதாக எண்ணிய நடப்பதாக  இனிய பாரதத்தில் மீண்டும்  கண்ணியன் கீதைச் செல்வன்  கண்ணனே பிறப்பானாக! கற்பெனும் பெருமை ஓங்க  கவினுரும் தாய்மை வாழ அற்புதக் கவிதை தோன்ற  ஆனந்த இல்லம் காண  நற்பெரும் தவத்தராய  நங்கைமார் உயர்ந்து வாழ  கற்புயர் நாட்டில் மீண்டும்  கண்ணகி பிறப்பாளாக! தந்தையைப் பணிந்து போற்றி  தாய்மையை வணங்கி ஏற்றி  சிந்தையைச் செம்மையாக்கி  செயல்களை நேர்மையாக்கி  செந்தமிழ் நாட்டோர் வாழ்வில்  செல்வங்கள் குவிந்து காண சிந்தையால் உயர்ந்து நின்ற  ஸ்ரீராமன் பிறப்பானாக! கணவனே தெய்வம் என்றும்  காடெல்லாம் சோலை என்றும்  அணிமணி வேண்டேன் என்றும்  அவனையே தொடர்வேன் என்றும்  பணிவோடு பண்பும் கொண்டு  பாவலர் ஏற்ற வாழும்  தணலெனும் கற்பின் செல்வி  ஜானகி பிறப்பாளாக! ஒவ்வொரு பிறப்பும் இங்கே உயர்ந்ததாய்ப் பிறப்பதற்கு  செவ்விதழ் நீலக் கண்ணாள் திருமகள் தமிழ் மீனாட்சி  செவ்விதின் அருள்வாளாக  தேசத்தை உயர்த்துகின்ற...

பாடலிபுத்திரம் எங்கே இருக்கிறது? தமிழண்ணல்

  பல சிற்றரசுகளை எல்லாம் ஒருங்கிணைத்த மகதப் பேரரசுதான் இந்திய வரலாற்றில் முதலிடம் பெறுகிறது. தொடக்கத்தில் பிம்பிசாரனும் அவன் மகன் அஜாதசத்துருவும் ஆட்சி செய்தனர். பிம்பிசாரன் இராஜகிருகம் என்ற தலைநகரிலிருந்து ஆண்டான். ஆனால் அவன் மகன் அஜாதசத்துரு தலைநகரைக் கங்கைக்கரைக்கு மாற்றினால், அரசை விரிவுபடுத்தவும் சிற்றரசுகளை அடக்கி ஆளவும் உதவும் என எண்ணினான். இவ்வாறு ஓரளவு நடுவண் உள்ள இந்தியப் பகுதியில், பாடலிபுத்திரம் என்ற நகரை மிகவும் திட்டமிட்டு, உலகிற் சிறந்ததாக உருவாக்கினான். 150 ஆண்டுகள் மகதப் பேரரசு சிறந்து விளங்கியது. பின்னர் நந்தர்கள் என்ற சிற்றரசு மேலோங்கி, மகத நாட்டை, பாடலிபுத்திர நகரையே தலைநகராகக் கொண்டு ஆளத் தொடங்கினர். ஏறத்தாழ 250 ஆண்டுகள் நந்தர்கள் ஆட்சி சிறந்தோங்கியது. நந்தர் புகழ் இந்திய நாடு முழுவதும் பரவியது. தமிழகத்திலும் அது பரவியதால், சங்க இலக்கியத்தில் அவர்கள் தொடர்பான குறிப்பு இடம்பெற்றுள்ளது. கி.மு.550 முதல் கி.மு.322 வரை சிறப்புற்றிருந்த நந்தர்களைப் பற்றிக் குறிக்கும் தமிழ்ச் செவ்வியல் இலக்கியம் அக்காலத்தது என்பதில் ஐயம் இல்லை. "பாடலிபுத்திர நகரம்' எங்கே இருந்...