நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந் தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே. (கந்தரலங்காரம்) எந்த நாள் தான் என்னை என்ன செய்துவிடமுடியும்? எந்த முன்வினை தான் என்னை என்ன செய்துவிடமுடியும்? என்னைத் தேடிவந்த கிரக நிலை தான் என்னை என்ன செய்துவிடமுடியும்? கொடிய கூற்றுவன் தான் என்னை என்ன செய்துவிடமுடியும்? குமரக்கடவுளின் இரண்டு திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும் தண்டைகளும் ஆறு திருமுகங்களும் பன்னிரு தோள்களும் கடம்பமலர் மாலையும் எனக்கு முன்வந்து தோன்றும் போது.