Skip to main content

Posts

Showing posts from November, 2022

Rules of pronunciation

  GENERAL RULES OF PRONUNCIATION 1)Short Words always have short vowels. They are mostly a single syllable word. Example:  sit, put etc 2) If two vowels come consecutively in a word, it is pronounced as a single letter. Usually the first vowel sound is elongated. Example:  Meat, e sound is elongated.  This is considered to be a long vowel. 3) Vowel sounds in front of double consonants are pronounced as short vowels. Example: Dinner, the i sound is pronounced as a short vowel. 4) E sound at the end of words are not pronounced . Example: site , kite (e- sound is not pronounced) 5) c sound is pronounced as s if it comes after i, e or y. Example:  city, century, cycle (c is pronounced as s) 6) s is pronounced as z if it comes between two vowels. Example: Phase, Please 7) Two consecutive consonants are considered and pronounced as a single letter. Example:  occur, buzz 8) The letter y acts both as a vowel and consonant. i) It acts as a consonant in front of a...

வேலைக்குப் போய்ப் பார்த்த வேலை...

     அவள் தினைப்புனம் காவலுக்கு வருகிறாள். அங்கே அவனைப் பார்த்துப் பேசுகிறாள். நாளும் நாளும் அது தொடர்கிறது. இப்படியிருக்க ஒருநாள் அவள் தோழி அவனிடம் சொல்கிறாள்.       கைகளைக் குவித்து வைத்தது போல  காந்தள் மலர்கள் (கண் வலிப் பூ) மலர்ந்திருக்கும்.      அந்தப் பூக்களை, பெண்குரங்குகள் பறித்து வைத்துக்கொண்டு ஆடும். அது எப்படி இருக்கும் தெரியுமா?       திருமண விழாவில் கொண்டு செல்வார்களே  முளைப்பாலிகை அது போல   ஏந்திக்கொண்டு அவை ஆடும்.   இப்படிப்பட்ட பெருமை கொண்ட இந்த மலை நிலப்பரப்பைச் சேர்ந்த தலைவனே!       தினைப்புனம் காக்கும் பணி முடிந்துவிட்டது. இனி நாங்கள் இங்கு வருவது கஷ்டம். இது தான் சொன்ன விஷயம். சொல்ல வந்த விஷயம் இது தான்.      தினைப்புனம் போகிறோம் என்று சொல்லிவிட்டு இத்தனை நாள் இங்கு வர முடிந்தது.  வந்து   உன்னைப் பார்க்க முடிந்தது. அந்தக் காவல் வேலை இன்று முடிந்துவிட்டது.   இனி அப்படி வரமுடியாது.       அ...

பூப்பறிக்க என்னை அனுப்பல .. அதான்...

  குழந்தையைக் கொஞ்சும் போது குழந்தையிடம்  பேசுவது போலவே இருக்கும்.  ஆனால் அதில் கணவனுக்கு அல்லது  தன் பிற சொந்தங்களுக்கு ஒரு செய்தி இருக்கும். அப்படித் தான் இங்கு ஒரு பெண்ணின் தோழி அந்தப் பெண்ணிடம் பேசிக்கொண்டிருக்கிறாள். அந்தப் பெண்ணை வெளியே எங்கும் பார்க்க முடியாமல், அவள் வீட்டருகே காத்திருக்கிறான் அவன். வீட்டில் எல்லோர் முன்பாக அவனிடம் பேச முடியுமா என்ன? எனவே அவனோடு பேச முயற்சி செய்யாமல் அந்தப் பெண்ணிடம் பேசுகிறாள். பேசுவது என்னவோ அந்தப் பெண்ணிடம் தான். ஆனால்  உண்மையில் காத்திருக்கும் இவனுக்குச் சொல்லப்படும்  செய்தி அது. அப்படி என்ன சொல்லுகிறாள்? நீயும் நானும் நேற்று  தேன் சிந்தும் பூஞ்சோலையில் பூவில் வந்து அமரும் வண்டுகளைத் துரத்திக்கொண்டிருந்தோம். கடலலைகள் வந்து விளையாடும் அந்த உப்பங்கழிமுகத்தில், அழகிய வெண்மணலில் விளையா டி க் கொண்டிருந்தோம். இதைத் தவிர நாம் எதுவும் செய்யவில்லையே. அப்படி ஏதாவது  செய்திருந்தால் எல்லோருக்கும் தெரிந்திருக்குமே.  ஆனால் அம்மா என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறாளோ தெரியவில்லை.   தினந்தோறும் அந்தக் கடற...

தாம்பாளமா? தட்டா?

   தேங்காய், பழம் முதலிய பூஜைப் பொருள்களை ஒரு தட்டில் வைத்து எடுத்து வருவதைப் பார்த்திருப்போம்.  தாம்பாளம் என்பது அந்தப் பூஜைப் பொருள்கள் என்பதாகப் புரிந்து கொள்கிறோம். இந்தப் பொருள்களையெல்லாம் எதில் வைத்து எடுத்து வருகிறோமோ அதை தாம்பாளத்தட்டு என்று குறிப்பிடுகிறோம். அது சரியா?  உண்மையில் தாம்பாளம் என்றாலே தட்டு என்று தான் பொருள்.   அளவில் சிறியதாய் உள்ளதைத் தட்டு என்றும் பெரியதாய் உள்ளதைத் தாம்பாளம் என்றும் சொல்வார்கள்.  'தாம்பாளம்தட்டு' என்பது இரவு பகல் போன்றது. இரவுபகல் என்றால் இரவும் பகலும் என்று புரிந்து கொள்கிறோம். இரவுப்பகல் என்று ஒன்று இல்லை.   தாம்பாளம்தட்டு  என்பதும் அப்படித்தான். அதை, தாம்பாளமும் தட்டும் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது பெரிய தட்டுக்குள் ஒரு சிறிய தட்டை வைத்து எடுத்து வரும்போது அது தாம்பாளம்தட்டு என்றோ தாம்பாளந்தட்டு என்றோ சொல்லப்படுகிறது. தாம்பாளத்தட்டு என்று ஒன்று இல்லை.  வெண்கலத்தட்டு,  வெள்ளித் தட்டு,  எவர்சில்வர் தாம்பாளம்  என்றெல்லாம் சொல்வதைக் கேட்டிருப்போம். அவை தான் சரி...

கதறுது கதவு

கதறுது கதவு தாய்மார்கள் கதவினை அடைக்கிறார்கள் ; பெண்கள் கதவினை திறக்கிறார்கள் . ஏன்? சேரமன்னன் தேரில் போகிறான் . வண்டுகள் தேனினை எடுக்க மொய்த்திடும் மிகுந்த நறுமணம்  மிக்க மலரை அணிந் து , வேகமாக ஓடும் புரவி பூட்டியதேரின் மீது அமர்ந்து போகிறான் சேரமன்னன் .   அவனைக் காண பெண்கள் வீட்டுக்கதவுகளைத் திறக்க , எங்கு சேர மன்னனின் அழகில் மயங்கி நம் வீட்டுப் பெண்கள் குடும்பப் பெருமைக்கு இழுக்கு சேர்த்து விடுவரோ என்று அப்பெண்களின் தாய்மார்கள் கதவினை அடைக்க …  இவர்கள் இப்படி மாறி மாறி அடைக்கவும் , திறக்கவும்  இருக்க …  இவர்கள் மத்தியில் அகப்பட்டு கொண்ட கதவின் குமிழிகள்  தான் பாவம் தேய்ந்து கொண்டே இருக்கின்றன.     தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத் தேயத் திரிந்த குடுமியவே-ஆய்மலர் வண்டுலாஅங் கண்ணி வயமான்தேர்க் கோதையைக் கண்டுலாஅம் வீதிக் கதவு . ( முத்தொள்ளாயிரம் )

ஊரு விட்டு ஊரு வந்து...

  அவள் ஒரு நாட்டியமாடும் ஆட்டக்காரப் பெண். ஆட்டமாட அங்கே இங்கே என போகும் இடங்களிலெல்லாம் அவனைப் பார்க்கிறாள். அவனுக்கும் ஆட்டம் ஆடுவது தான் தொழில். அவன் மேல் பிரியம் அவளுக்கு . இப்படியிருக்க அவனைச் சிலகாலமாகக் காணவில்லை. அவனைக் காணாத வருத்தத்தால், அவள் உடல் மெலிகிறது.  அவள் கையில் உள்ள வளையல்கள் நெகிழ்ந்தன. அவளைப் பார்க்க வந்த அவள் தோழி, இப்படி மெலிந்து போகக்   காரணம் என்னவென்று தெரியாமல் திகைக்கிறாள். அவளது திகைப்பை அறிகிறாள் அவள். தான் உண்டு தன் ஆட்டம் உண்டு என்று இல்லாமல் இப்படிக் காதல் வயப்பட்டு மெலிந்து போனதை தோழியிடம் சொல்கிறாள்.  நான் மதிப்பு வைத்துள்ள அவன்  வீரர்கள் கூடியுள்ள விழா நடைபெறும் இடங்களில் இருப்பானா என்று தேடினேன்.   அங்கு அவனைக் காணவில்லை. ஆண்கள் பெண்களோடு சேர்ந்து ஆடுகின்ற துணங்கைக் கூத்து நடைபெறும் இடங்களில் எல்லாம் தேடினேன்.   அங்கும் அவனைக் காணவில்லை.  நான் ஒரு ஆட்டக்காரப் பெண். பிரகாசமான சங்கால் செய்யப்பட்ட, என் வளையல்கள்  நான் மெலிந்து போனதால் என் கையில் தங்காமல் நழுவுகின்றன. என் வள...

எனக்கு ஒரு சந்தேகம்!

  அடர்ந்த காடுகள் பெரிய சோலைகள் இதெல்லாம் மன்மதனின் படைவீடுகளோ?   அழகிய இந்த வானம் அந்த மன்மதனின் தேரோடும் வீதி தானோ! அலைபாயும் இந்தக் கடல் தான் அவனது மீன்கொடியோ! இப்படி அந்த மன்மதனின் சாம்ராஜ்யம். எனக்கு அதில் ஒரு சந்தேகம். இந்த உலகம் பூராவும் உள்ள புராணங்கள் எல்லாம் சிவபெருமான் மன்மதனை எரித்து விட்டதாகச் சொல்கின்றன. அந்த மன்மதன் எரிந்து போனது உண்மையானால் நான் இப்படி காதல் மயக்கத்தில் மாட்டிக்கொண்டு   அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்கமாட்டேனே! சிவ பெருமான் மன்மதனை எரித்து விட்டான் என்று சொன்னதெல்லாம் பொய்யாகத் தான் இருக்குமோ! நளன் மேல் காதல் கொண்ட தமயந்திக்குத் தான் இப்படியொரு சந்தேகம்! கானும் தடங்காவும் காமன் படைவீடு வானும்தேர் வீதி மறிகடலும் - மீனக் கொடியாடை வையமெல்லாம் கோதண்ட சாலை பொடியாடி கொன்றதெல்லாம் பொய். (நளவெண்பா) கான் - கானகம் தடங்கா - பெரிய சோலைகளும் மறிகடல் - அலை பாயும் கடல்கள் கோதண்ட சாலை - போர்க் களம் பொடியாடி - சிவபெருமான்  (சாம்பல் பொடியை உடலில் பூசிக் கொண்டு ஆடுவதால் பொடியாடி. ஆகா இப்படி ஒரு பெயரா!)

எப்போது வருமோ திருவிழா?

 உள்ளுர்க் கோவில் விசேஷம் என்றால் ஊரே விழாக்கோலம் தான். அவன் பக்கத்தில் இருக்கும் போது என் மனசும் அப்படி ஆகிவிடுகிறது. ஆனால் அவன் வெளியூர் போயிருக்கும் போது எனக்குள் ஏனோ ஒரு வெறுமை வந்து விடுகிறது. யாரும் குடியிருக்காத வீட்டில் அணில் மட்டும் விளையாடிக்கொண்டிருப்பது மாதிரி ஆகிவிடுகிறது என் நெஞ்சம்.  அணில் விளையாடும் ஆளில்லாத வீடுவேண்டாம்.  விழாக் கோலம் பூண்ட வீதிக்கு ஏங்குது என் மனம். எப்போது தான் அவன் வருவானோ? காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து, சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற; அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர் மக்கள் போகிய அணில் ஆடு முன்றில் புலப்பில் போலப் புல்லென்று அலப்பென் தோழி! அவர் அகன்ற ஞான்றே. அணிலாடு முன்றிலார் (குறுந்தொகை 41)

Keep a straight face

When my boss fell off, I found it difficult to keep a straight face. Keep a straight face? Why to keep it straight? Keep a straight face means not laugh or smile. That is expressionless. Can I say, it was hard to keep a straight face when the political leader was confusing I-day with Republic Day. Yes, it is right. The word straight means expressionless. When we laugh or frown, our face changes, and it informs others as to the kind of mood we are in. Is there any story behind this usage? The expression ‘to keep a straight face’ was first used in the game of cards. A good player keeps his face wooden; by doing this, he doesn’t let on to the other players what kind of cards he holds.  

அது என்ன எண்பேரெச்சம்?

பழந்தமிழ் இலக்கியங்களில் அரிதாகக் காணப்படும் செய்திகள் பல. அதில் ஒன்று எண்பேரெச்சம். அது என்ன எண்பேரெச்சம்? அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்று சொல்லுவார்கள். அப்படி அரிதான மானிடப் பிறப்பிலும் குறை தோன்றி விடுவதுண்டு. அத்தகைய குறைகளை எண்பேரெச்சம் என்று பழந்தமிழர் வகைப்படுத்தினர்.   அதை ' சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும் கூனும் குறளும் ஊமும் செவிடும் மாவும் மருளும் யாவும் எருளும் ' என்று எண் வகைக் குறைப் பிறப்புகளை எண்பேரெச்சம் என்று புறநானூறு கூறும். சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும் கூனும் குறளும் ஊமும் செவிடும் மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு எண்பேர் எச்சம் என்றிவை எல்லாம் பேதைமை அல்லது ஊதியம் இல்லென முன்னும் அறிந்தோர் கூறினர் (புறநானூறு) இந்த எட்டில் எளிதாகக் காணப்படுவன செவிடும், ஊமையும், கூனும், குறளும் ஆகிய நான்கும். சிறப்பில் சிதடு என்பது அறிவு குறைந்து மூளை சிறியதாய்ப் பிறக்கும் பிறப்பு. சிதட்டுக்காய் போல் தலையில் உள்ளீடு இல்லாத பிறப்பு. உறுப்பில் பிண்டம் என்பது கண், மூக்கு, முதலிய உறுப்புகள் இல்லாமல் பிறக்கும் மணைக்கட்டைப் பிறவி. இதை 'ஊன்தடி...

அப்போதிருந்து தான் இப்படி

எப்போதும் போல இல்லாமல் ஏதோ  சிந்தனையிலேயே அவன் இருக்கிறான்.  அவனைச் சந்திக்க வந்த தோழன் அவன் நிலையைப் பார்க்கிறான்.   இவன் ஏன் இப்படி இருக்கிறான் ? என்னதான் ஆச்சு இவனுக்கு?  என்று யோசித்து எந்த முடிவுக்கும் வரமுடியாமல் அவனிடமே காரணம் கேட்கிறான். என்ன நடந்தது என்று  அவன் சொல்கிறான். அந்தப்  பெரிய மலை இருக்கிறதல்லவா அங்கு போயிருந்தேன்.  அந்த மலையில் பருத்தி விதைக்கப்பட்ட தினைப்புனம் ஒரு இருக்கிறது. அங்கே, தினையை உண்ணவரும் குருவிகளை ஒருபெண் ஓட்டிக்கொண்டிருந்தாள்.  அவள் இனிமையாகப் பேசினாள். மென்மையான தோள்களை உடையவள் அவள். அவளுடைய பெரிய, குளிர்ச்சியான கண்கள்  பூவைப் போல பார்க்க அழகாக இருந்தன. அந்தக் கண்கள்  அங்கும் இங்கும் சுற்றிச் சுழல்வது கொள்ளை அழகு. நானும் அந்த அழகை ரசித்துக் கொண்டிருந்தேன். அதே கண்கள் கணைகள் போல் மாறி என்னைத் தாக்கின.  அந்த அழகிய விழியம்புகள் என்னைத் தாக்கியதிலிருந்து  நான் இப்படி பித்துப் பிடித்ததுபோல இருக்கிறேன்.   பூவொத் தலமருந் தகைய ஏவொத்து எல்லாரும் அறிய நோய்செய் தனவே தேமொழித் திரண்ட மென்தோள் ...

அங்கே என்ன சுவாரஸ்யம்

 என் மனம் தான் அவனையே நினைத்துக் கொண்டிருக்கிறது.  அவனும் இந்த ஊரில் தான் வாழ்கிறான். ஆனால் நாம் வாழ்கின்ற இந்தச் சேரிக்கு வரமாட்டான். சேரிக்கு வந்தாலும் என் தோள் சேரவேண்டும் என்றா வருவான்? உண்மையில் அவன் மனதிலோ கண்ணிலோ கவனத்திலோ என்னை எண்ணுவது கூட இல்லை. வேற்று ஜாதிக்காரர்களின் சுடுகாட்டை யாராவது சுவாரஸ்யமாகப் பார்ப்பார்களா என்ன? உடனே  கடந்து போய்விடுவார்கள் அல்லவா!  என்னையும்  அவன் அப்படித் தான் பார்க்கிறான் போல! ஆனால் என் மனம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறது? வில்லிலிருந்து புறப்பட்ட நாண் எப்படி அங்கே இங்கே போகாமல் இலக்கை நோக்கி விரைந்து போகுமோ அப்படி என் மனம் அவன் இருக்கும் இடத்தை நோக்கிப் போய் விடுகிறது.  இந்த மனதுக்கு மட்டும் அறிவோ வெட்கமோ கொஞ்சம் கூட இருப்பதில்லை. ஓரூர் வாழினுஞ் சேரி வாரார்  சேரி வரினு மார முயங்கார்  ஏதி லாளர் சுடலை போலக்  காணாக் கழிப மன்னே நாணட்டு  நல்லறி விழந்த காமம்  வில்லுமிழ் கணையிற் சென்றுசேட் படவே.  ( குறுந்தொகை)  

சாகசம் செய்யப் போய் ...

வயலில் காளை மாடுகளைப் பூட்டி உழுது கொண்டிருக்கிறார்கள்.  ஒரு பூட்டு உழுது முடித்ததும், உழுத காளை மாடுகளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு அடுத்த பூட்டு மாடுகளைப் பூட்டத் தொடங்குகிறார்கள்.   அதுவரை உழுத காளைகளை விவசாயிகள் அவிழ்த்து மேயவிட்டார்கள்.  பூட்டப்படாத வேறு காளைகளை ஏரில் பூட்டினார்கள். அப்போது,  வயல் சேற்றில் ஒரு வரால் மீன் துள்ளிக் குதித்தது. அதைப் பார்த்த ஒரு மயிலைக் காளை மிரண்டு அங்கும் இங்கும் ஓடியது. எதிரில் வருபவர்களையெல்லாம் முட்டித் தள்ளியது. எல்லோரும் என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கும்போது, அந்தப் பள்ளன் தைரியமாக முன்னே வந்து பேசினான். ‘கவலைப்படாதீர்கள், இந்த மாட்டின் குறும்பை அடக்குவதற்கு நான் இருக்கிறேன்’ என்றான். மறுவிநாடி,  அவன்  மாட்டின் முன்னே சென்று, அதைத் தடுத்து நின்றான். அவனைக் கொம்பின் நுனியால் குத்தித் தள்ளியது காளை. பள்ளனும் லேசான மயக்கத்தில் கீழே விழுந்தான். பூட்டும் காளையை விட்டுப் பூட்டாக் காளையைப் பூட்டும் பொழுதில் ஒரு புல்லைக் காளை  மோட்டு வரால் குதிக்க முகத்தை மாறி முடிக்கி மறிக்கும் ஆளை முட்டி ஓட...

அவளும் நானும்..

  கொடுக்கப்பட்டுள்ள சொற்களில்  ' உம் '   எனும் விகுதி வெளிப்படையாக வருமாயின் அது எண்ணும்மை எனப்படும்.           அல்லும்   பகலும்           காதலும்   கற்பும்           அவனும்   இவனும்   என்பதெல்லாம் எண்ணும்மைகள். முழுக்க முழுக்க எண்ணும்மைகளைக் கொண்டே பாரதிதாசன் ஒரு பாடல் எழுதியுள்ளார். அவளும் நானும் எப்படி தெரியுமா ? என்பதற்கு விடையாக வரும் எண்ணும்மைப் பாடல் இது. அவளும் நானும்.. அமுதும் தமிழும்.. அவளும் நானும்.. அலையும் கடலும்.. அவளும் நானும்.. தவமும் அருளும்.. அவளும் நானும்.. வேரும் மரமும்.. ஆலும் நிழலும்.. அசைவும் நடிப்பும்.. அணியும் பணிவும்.. அவளும் நானும்.. அவையும் துணிவும்.. உழைப்பும் தழைப்பும்.. அவளும் நானும்..அளித்தலும் புகழும்.. மீனும் புனலும்..   விண்ணும் விரிவும்.. வெற்பும் தோற்றமும்.. வேலும் கூரும்.. ஆறும் கரையும்.. அம்பும் வில்லும்.. பாட்டும் உரையும்.. நானும் அவளும்.. நானும் அவளும்.. உயிரும் உடம்பும்.. நரம்பும் யா...