காடை, கௌதாரி என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். காடைக் குருவி மிகக் குறுகிய தூரம் பறக்கக் கூடிய ஒரு பறவை. தோட்டம், காடுகளில் தரையை ஒட்டி புழு பூச்சிகளைத் தின்று வாழுகின்ற ஒரு பறவை. காடைக் குருவியை வேடர்கள் கண்ணி வைத்துப் பிடிப்பது வழக்கம். அப்படிப் பிடித்த ஒரு காடைக்குருவியை தரையில் வைத்து அதன் மேல் கூடையைக் கவிழ்த்து வைத்துவிட்டு மற்றொரு கண்ணியைப் பார்க்க வேடன் ஒருவன் போகிறான். சிறிது நேரம் கழித்து பிடித்த இந்தக் காடைக் குருவியை எடுத்துக் கொண்டு செல்லலாம் என்று வந்து கூடையை லாவகமாகத் தூக்கிப் பார்க்கிறான். வெறும் கூடை தான் இருக்கிறது. கூடைக்குள்ளிருந்த காடையைக் காணோம். ஒரே குழப்பம் அவனுக்கு. காடை எப்படி அதற்குள் காணாமல் போகும்? காடையை கூடைக்குள் வைத்து மூடி விட்டுப் போன பின், அந்தக் குருவி தரையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கிளறி கூடையின் ஓரமாக கொஞ்சம் பள்ளம் தோண்டியது. அந்தப் பள்ளத்துக்குள் நுழைந்து கூடையின் மறுபுறம் வந்து பறந்து போய் விட்டது. காடை போனது அப்படியே இருக்கட்டும். அதற்குள் இதையும் பார்த்துவிடுவோம். பாண்டிய மன்னன் நகர் வலம் போகிற...