Skip to main content

Posts

Showing posts from September, 2024

Beautiful Lines - தாகூர்

பேசும் பாஷையிலே பேச முடியாத மிருகத்துக்கும், பேசத் தெரிந்த மனிதனுக்கும் உள்ள வித்தியாசங்களின் எல்லைகள் எங்கே ஒழிந்து கொண்டிருக்கின்றன என்று நான் ஆச்சரியப்படுவதுண்டு. உலகத் தொடக்கத்தில் இருந்த எந்த சொர்க்கத்தின் வழியாக, சிருஷ்டியின் எட்டாத காலம் முதல் மனித இதயமும் மிருக உள்ளமும் மிக எளிய முறையில் கலந்து உறவாட ஆரம்பித்தன?  இரு ஜந்துக்களுக்கும் உள்ள மனத் தொடர்பு மறக்கப்பட்ட நிலையிலும் அவர்களுடைய தொடர்ந்த நடைப் பழக்கம் இன்னும் அழியவில்லையே. இருந்தாலும்,  திடீரென்று சொல்லற்ற இசையில், மங்கிய ஞாபகசக்தி எழுந்து நின்று பேசுகிறது.   அந்த மிருகமும் மனிதனுடைய முகத்தைப் பார்த்து அன்பு கலந்த நம்பிக்கையுடன் பழகுகிறது;  மனிதனும் அன்பு கலந்த ஆச்சரியத்துடன் அதன் கண்களையே பார்த்து நிற்கிறான்.  இந்த இருவரும்,  மாற்றுடடிலே,  நண்பர்களாகவே சந்திக்கிறார்கள்.  உடல் வேறு என்றும்  உள்ளம் ஒன்று என்றும்,  மிக மங்கலான சிந்தனையுடன் தான் உணர்கிறார்கள்.  -Rabindranath Tagore  ( in Tagore poems)

சிலம்பு கழி நோன்பு

  பழங்காலத்தில் பெண் குழந்தைக்குப் பாலுண்ணும் பருவத்தில் கால்களில் சிலம்பணிவிப்பார்கள்.   இப்பெண் வளர்ந்து கன்னியாக இருக்கும் வரை சிலம்பு அணிந்திருப்பாள்.   திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின் திருமணத்திற்கு முன்பாக சிலம்பை அகற்றும் விழா நடக்கும்.   அந்நாளில் இது   ஒரு சமுதாய மரபாகக் கடைபிடிக்கப்பட்டது.   இதுவே சிலம்பு கழி நோன்பு என்ற விழாவாக நடத்தப்பட்டது. பொதுவாக சிலம்பு கழி நோன்பு மணமகன் அல்லது மணமகள் இல்லத்திலும் திருமண விழா மணமகள் வீட்டிலும் நடந்தது.               மணமகன் வீட்டில் சிலம்பு கழி நோன்பு நடந்தாலும் திருமணம் என் வீட்டில் நடக்க வேண்டும் என பெண்ணின் தாய் கூறுவதை ,             நும்மனைச் சிலம்பு கழீஇ யயரினும்             எம்மனை வதுவை நன்மணம் கழிக    (ஐங்குறுநூறு: பாடல் 399) என்ற வரிகளால் அறியலாம்.           ...

செப்டம்பர் 30

செப்டம்பர் 30, 1687: ஒளரங்கசீப் கோல் கொண் டா வைக் கைப்பற்றினார் . செப்டம்பர் 30, 1902: செயற்கைப் பட்டு உற்பத்திக்கான காப்புரிமை அமெரிக்க விஞ்ஞானிகள் வில்லியம்   வாக்கர் , ஆர்தர் லிட்டில் ஆகியோருக்கு வழங்கப்பட்டது .   செப்டம்பர் 30,1910: பிளேக் நோயால் ஒரே ஆண்டில் நாலரை லட்சம் பேர் இறந்துவிட்டதாக அரசு அறிக்கை   வெளியானது . செப்டம்பர் 30,1922: இத்தாலியில் முஸோலினி பாசிஸ்ட் அரசை அமைத்தார் . செப்டம்பர் 30, 1929: பிரிட்டனில் பி . பி . சி தினசரி தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கியது . செப்டம்பர் 30, 1957: பி . பி . சி தொலைக்காட்சியில் உலகிலேயே முதல் பெண் செய்தி வாசிப்பாளராக    ஆர்மைன் ஸ்டாண்ட் போர்ட் என்னும் பெண் செய்தி வாசித்தார் . செப்டம்பர் 30,1993: மகாராஷ்ட்ராவில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டது .    12000 பேர் பலியானார்கள் .   மரத்வாடா பகுதியில் 80 சதவீதம் வீடுகள் தரைமட்டமாயின .   தமிழகத்திலும் இந்த   நிலநடுக்கம் உணரப்பட்டது . செப்டம்பர் 30, 1993: ...

செப்டம்பர் 28

  செப்டம்பர் 28,1745: லண்டனில் ராயல் தியேட்டரில் ஜார்ஜ் மன்னருக்காக ‘ காட் சேவ் தி கிங் ’ என்னும் பாடல் முதன்முதலாகப் பாடப்பட்டது .   அதுவே பிரிட்டனின் தேசிய கீதம்.   ஆட்சி செலுத்துவது ராணியாக இருந்தால் ‘ கிங் ’ என்ற வார்த்தை ‘ குயின் ’ என மாற்றப்படும் . செப்டம்பர் 28,1865: பிரிட்டனின் முதல் பெண் மருத்துவர் ‘ எலிசபெத் கார்ட்டர் ’ டாக்டர் படிப்பிற்கான சான்றிதழ் பெற்றார் .   செப்டம்பர் 28,1894: டாம் ஸ்பென்சர் , சைமன் மார்க்ஸ் ஆகியோரால் பிரிட்டனின் முதல் ‘ செயின் ஸ்டோர் ’ ஆரம்பிக்கப்பட்டது . செப்டம்பர் 28,1895: வெறி நாய்க்கடிக்கு மருந்து கண்டுபிடித்த லூயிஸ் பாஸ்டர் காலமானார் .   செப்டம்பர் 28,1994: 800 படங்களுக்கு மேல் நடித்த நகைச்சுவை நடிகர் கே . ஏ . தங்கவேலு தூங்கும்போது , அவர் உயிர் பிரிந்தது .  

செப்டம்பர் 27

  செப்டம்பர் 27,1826: ஸ்டாக்டனுக்கும் டார்லிங்டனுக்கும் இடையே   மணிக்கு 16 கி . மீ வேகத்தில் செல்லும் நீராவி எஞ்சின் பூட்டப்பட்டு முதல் பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது .   செப்டம்பர் 27,1833: ராஜா ராம் மோகன்ராய் இங்கிலாந்தில் காலமானார் .   செப்டம்பர் 27, 1910: இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட முதல் விமானத்தின் வெள்ளோட்டம் பிரான்சில்  நடந்தது .   செப்டம்பர் 27 : 1925 நாக்பூரில் கேசவராம் பாலிராம் ஹெட்ஜ்வார் என்பவரால் விஜயதசமி தினமான இன்று   RSS   ( ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் ) ஆரம்பிக்கப்பட்டது . செப்டம்பர் 27,1956: திருவாங்கூர் - கொச்சி மாநிலத்திலிருந்து கன்னியாகுமரி பிரிக்கப்பட்டு தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது .   செப்டம்பர் 27, 1981: காரை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் Rent-a Car முறை இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது .

இவியப்பா வருவாங்க...

      வெகு காலத்துக்கு முன்பு நமது சமூகம் தாய்வழிச் சமூகமாக இருந்தது.  குழந்தைகள் பெயரை முன்வைத்து குழந்தையின் தந்தையை குறிப்பிடுவதை சேய்வழிஅழைத்தல் என்ற மரபாகப் போற்றினர். தாய் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தபோது திருமணத்திற்குப் பின் கணவன், மனைவியின் வீட்டில் சென்று வாழ்ந்து வந்தான்.  தொழில் காரணமாக அவ்வாறு மனைவியின் வீட்டில் வாழ முடியாத போது அடிக்கடி சென்று வருபவனாக இருந்தான்.        தாய்வழிச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உற்றார் என்றும் பெண்ணின் கணவன் வழியைச் சேர்ந்தோர் உறவினர் என்றும் கருதப்பட்டனர். ஒரு குடும்பத்தின் மருமகனைக் குறிப்பிட்டுக் கூற முற்பட்டபோது குழந்தையின் தந்தை என்றே குறிப்பிட்டனர். சேய்வழி அழைத்தல் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.  முன்கை இழையணி பணைத்தோள் ஐயை தந்தை (அகநானூறு பாடல் 6), அகுதை தந்தை(குறுந்தொகை பாடல்  298) என மருமகனை 'மகள் குழந்தையின் தந்தை' என்றே குறிப்பிடுகின்றன. இன்றும்கூடமாமியார் தன் மருமகனைக்  குறிப்பிட்டுச் சொல்லும் போது "இவியப்பா வருவாங்க" , "இவியப்பா  என்ன சொல்...

செப்டம்பர் 22

செப்டம்பர் 22,1791: மைக்கேல் பாரடே இங்கிலாந்தில் இன்று  தான்  பிறந்தார் .   செப்டம்பர் 22,1547: “ சாண்டாமாரியா ” என்னும் கப்பலைக் காப்பீடு செய்து அதற்கான காப்பீட்டுப் பத்திரம் (Marine Insurance Policy) ஜான் புரோக் என்பவருக்கு வழங்கப்பட்டது .   முதல் மரைன் இன்சூரன்ஸ் பாலிஸி இது .   செப்டம்பர் 22,1914: “ எம்டன் ” என்னும் ஜெர்மனி போர்க்கப்பல் சென்னை நகரை குண்டு வீசித் தாக்கியது .  இரவு 9:30 மணிக்கு சென்னைத் துறைமுகத்தையும் மற்றும் நகரப் பகுதிகளையும் குண்டுவீசித் தாக்கியது. மொத்தம் 130 குண்டுகளை அது வீசியது. முதல் உலகப் போரின் போது சென்னையில் குண்டுவீசப்பட்டது பற்றிய  ஒரு குஜிலிப் பாடல் இது.   (குஜிலிப்பாட்டு என்பது ஓரளவு எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் பாடும் பாட்டு என்பதால் எழுத்துப் பிழைகள் மலிந்திருக்கும்) உ   செந்தில் ஆண்டவர் துணை    செஏன்னப் பட்டணத்தில் ஜெர்மன் எம்டன் கப்பல் கடர்க்கரையிலிருந்து குண்டடி ஆரம்பிக்க பிரிட்டிஷ் சேனைகள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து எம்டன் கப்பலை குண்டால்அடித்துத் துரத...

செப்டம்பர் 17 இதே நாளில்

செப்டம்பர் 17,1879: ஈ. வெ. ரா (ஈரோடு வெங்கடப்பா இராமசாமி நாயக்கர்) பிறந்த நாள். பெரியார் என்ற அடைமொழியால் அறியப்படுபவர் இவர்.  செப்டம்பர் 17,1915: இந்தியாவின் தலைசிறந்த ஓவியர்களுள் ஒருவரான எம்.எப்.ஹுசைன் பிறந்த நாள்.    செப்டம்பர் 17,1930: வயலின் இசைக் கலைஞர் லால்குடி ஜெயராமன் பிறந்த நாள்.  செப்டம்பர் 17,1950:   பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள். செப்டம்பர் 17,1953: திரு.வி.க மறைந்த நாள். ஏழைத் தொழிலாளிக் கென்றும்  துணைநின்று  வாழுந்தமிழின் வளம் பெருக்கி - ஊழியங்கள்  செய்யப்பிறந்த திருவிக சென்றடைந்தான்  தையலொரு பாகனிரு தாள் . (திரு.வி.க மறைவின் போது கவிமணி எழுதியது) செப்டம்பர் 17, 1953: சையாமிஸ் இரட்டையர்களை பிரிக்கும் அறுவை சிகிச்சை முறை அமெரிக்காவில் வெற்றிகரமாக நடந்தது.   சையாமிஸ் இரட்டையர்கள் என்றால் அங்கங்கள் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் என்று பொருள்.  சையாமிஸ் சீன பெற்றோர்களுக்கு 1811 ஆம் ஆண்டு அங்கங்கள் ஒட்டி இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.   ஒரு குழந்தையின் பெயர் சாங். இன்னொன்றின் பெயர் இங்க். அதனால் இது மா...