Skip to main content

அகப்பொருள் இலக்கணம்

 

பொருள் இலக்கணம் அகப்பொருள், புறப்பொருள் என்று இருவகைப்படும்

ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்படும் அன்பு  உணர்வை மையமாகக் கொண்டு அகப்பொருள் இலக்கணம் அமைந்துள்ளது. இதில் ஆணைத் தலைவன் என்றும் பெண்ணைத் தலைவி என்றும் கூறுவர்.

தலைவன், தலைவி என்று பொதுவாகப் பாடுவார்களே தவிர ஒருவருடைய இயற்பெயரைச் சுட்டிப் பாடுவதில்லை.

 அகப்பொருள் பாடல்கள் நாடகப் பாங்கிலான தன்மை கொண்டிருக்கும்.

எல்லாப் பாடல்களும் தலைவன், தலைவி, தோழி முதலியவர்களில் யாராவது ஒருவர் கூறுவதாக அமைந்திருக்கும்.

ஒரே பாடலில் இருவர் ல்து மூவர் உரையாடுவது போல இருக்காது.

ஒவ்வொரு பாடலுக்கும் திணைதுறை கூறப்பட்டிருக்கும்.

திணை, நிலம் சார்ந்த ஒழுக்கத்தைக் குறிக்கும்.

துறை என்பது பாடப்பெற்ற சூழலைக் குறிக்கும்.

அகப்பொருள் இலக்கணம் திணை அடிப்படையில் அமைந்ததாகும்.

 

அகப்பொருள் திணைகள் ஐந்து. அவை,

1. குறிஞ்சித் திணை
2.
முல்லைத் திணை
3.
மருதத் திணை
4.
நெய்தல் திணை
5
. பாலைத் திணை

 

இந்த ஐந்து திணைகளுக்கும் உரிய அகப்பொருள் இலக்கணம் மூன்று வகைப்படும். அவை,

1. முதற்பொருள்
2.
கருப்பொருள்
3.
உரிப்பொருள்

ஆகியன ஆகும்.

 

முதற்பொருள்

நிலம், பொழுது ஆகிய இரண்டும் முதற்பொருள் எனப்படும்

 

நிலம்

ஒவ்வொரு திணைக்கும் உரிய நிலம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து திணைகளுக்கும் உரிய நிலங்கள் பின்வருமாறு:

குறிஞ்சி- மலையும் மலை சார்ந்த இடமும்

முல்லை- காடும் காடு சார்ந்த இடமும்

மருதம்- வயலும் வயல் சார்ந்த இடமும்

நெய்தல்- கடலும் கடல் சார்ந்த இடமும்

பாலை- பாலை நிலமும் பாலை நிலம் சார்ந்த இடமும்

பொழுது

பொழுது என்பது காலம் என்று பொருள்படும். பொழுது சிறு பொழுது, பெரும்பொழுது என்று இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

 

சிறு பொழுது

சிறுபொழுது என்பது ஒரு நாளின் காலப் பிரிவுகள் ஆகும். சிறுபொழுது பின்வருமாறு அமையும்.

வைகறை- விடியற்காலம்

காலை- காலை நேரம்

நண்பகல்- உச்சி வெயில் நேரம்

எற்பாடு- சூரியன் மறையும் நேரம்

மாலை- முன்னிரவு நேரம்

யாமம்- நள்ளிரவு நேரம்

 

பெரும்பொழுது

பெரும்பொழுது என்பது ஓர் ஆண்டின் காலப்பிரிவு ஆகும்

 

சித்திரை, வைகாசி- இளவேனில் காலம்

ஆனி, ஆடி- முதுவேனில் காலம்

ஆவணி, புரட்டாசி- கார் காலம்

ஐப்பசி, கார்த்திகை- குளிர்காலம்

மார்கழி, தை- முன்பனிக் காலம்

மாசி, பங்குனி- பின்பனிக் காலம்

சிறுபொழுது, பெரும்பொழுது ஆகியவற்றை இவை இவை இந்தத் திணைகளுக்கு உரியவை என்று பிரித்து வைத்துள்ளனர்.

குறிஞ்சி-  குளிர்காலம், முன்பனிக்காலம்-  யாமம்

முல்லை- கார்காலம்- மாலை

மருதம்- ஆறு காலமும்- வைகறை

நெய்தல்- ஆறு காலமும்- எற்பாடு

பாலை- முதுவேனில், பின்பனி- நண்பகல்

 

ஒவ்வொரு நிலத்திற்கும் மேலே குறிப்பிட்ட காலங்கள் சிறந்தனவாக இருக்கும் என்பதால் இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது.

கருப்பொருள்

நிலமும் பொழுதும் ஆகிய இரண்டு முதற்பொருள்கள் அத்திணையில் உள்ள சூழலைத் தீர்மானிக்கின்றன. இவற்றின் காரணமாக ஒவ்வொரு திணையிலும் சூழல் வேறுபட்டுள்ளதுஒவ்வொரு திணையிலும் வாழும் மக்கள், அவர்களின் தொழில்உணவு, பொழுதுபோக்கு, அந்த நிலத்தில் உள்ள மரங்கள்பறவைகள், விலங்குகள், நீர்நிலை முதலியவற்றைக் கருப்பொருள் என்கின்றனர். கருப்பொருள், பாடல்களில் பின்னணியாகச் செயல்படுகின்றது. எடுத்துக்காட்டாகக் குறிஞ்சித் திணைக்கு உரிய கருப்பொருள் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

குறிஞ்சித் திணையின் கருப்பொருள்கள்:

தெய்வம்- முருகன்

தலைமக்கள்- வெற்பன், கொடிச்சி

மக்கள்- குறவர், குறத்தியர்

பறவை- கிளி, மயில்

விலங்கு- புலி, யானை

ஊர்- சிறுகுடி

நீர்நிலை- அருவி, சுனை

பூ- வேங்கை, குறிஞ்சி

மரம்- தேக்கு, அகில்

உணவு- மலைநெல், தினை

பறை- தொண்டகம்

யாழ்- குறிஞ்சி யாழ்

பண்- குறிஞ்சிப் பண்

தொழில்- தேன் எடுத்தல், வெறியாடல்

முல்லைத் திணையின் கருப்பொருள்கள்:

தெய்வம்- திருமால்

தலைமக்கள்- குறும்பொறை தோன்றல்கிழத்தி

மக்கள்- ஆயர்ஆய்ச்சியர்

பறவை- காட்டுக்கோழி

விலங்கு- மான்,முயல்

ஊர்- பாடி

நீர்நிலை- குறுஞ்சுனை

பூ- முல்லை,பிடவம்

மரம்- கொன்றை,காயா

உணவு- வரகு,சாமை,முதிரை

பறை- ஏறுகோட்பறை

யாழ்- முல்லையாழ்

பண்- சாதாரிப் பண்

தொழில்- மேய்த்தல், ஏறுதழுவுதல்

மருதத் திணையின் கருப்பொருள்கள்:

தெய்வம்- இந்திரன்

தலைமக்கள்- ஊரன்,மகிழ்நன்,மனைவி

மக்கள்- உழவர், உழத்தியர்

பறவை- நாரை,அன்னம்

விலங்கு- எருமை,நீர்நாய்

ஊர்- பேரூர்

நீர்நிலை- ஆறு

பூ- தாமரை,கழுநீர்

மரம்- காஞ்சி,மருதம்

உணவு- செந்நெல்,வெண்ணெல்

பறை- மணமுழவு

யாழ்- மருதயாழ்

பண்- மருதப் பண்

தொழில்- நெல்அரிதல்,விழாஎடுத்தல்

நெய்தல் திணையின் கருப்பொருள்கள்:

தெய்வம்- வருணன்

தலைமக்கள்- சேர்ப்பன், புலம்பன்,நுளைச்சி

மக்கள்- பரதவர்,பரத்தியர்

பறவை- கடல்காகம்

விலங்கு- சுறா

ஊர்- பாக்கம்

நீர்நிலை- உவர்நீர்க்கேணி

பூ- நெய்தல்,முண்டகம்

மரம்- புன்னை,ஞாழல்

உணவு- மீன்

பறை- மீன்கோட்பறை

யாழ்- விளரியாழ்

பண்- செவ்வழிப் பண்

தொழில்- மீன்பிடித்தல்,கடலாடுதல்

பாலைத் திணையின் கருப்பொருள்கள்:

தெய்வம்- கொற்றவை

தலைமக்கள்- விடலை,மீளி,எயிற்றி

மக்கள்- மறவர்,மறத்தியர்

பறவை- பருந்து, கழுகு

விலங்கு- செந்நாய்

ஊர்- குறும்பு

நீர்நிலை- கூவல்

பூ- குரா,மரா

மரம்- உழிஞை,பாலை

உணவு- வழிப்பறி உணவு

பறை- பகைத்துடி

யாழ்- பாலையாழ்

பண்- பஞ்சுரம்ப் பண்

தொழில்- வெஞ்சமம்,சூறையாடல்

உரிப்பொருள்

ஒவ்வொரு திணைக்கும் உரிய முக்கிய உணர்ச்சியைக் குறிக்க்கும் பொருளை உரிப்பொருள் என்பர். ஐந்து திணைகளுக்கும் உரிப்பொருள் பின்வருமாறு:

குறிஞ்சி-புணர்தல்-(தலைவனும் தலைவியும் ஒன்று சேர்தல்).

முல்லை- இருத்தல்(தலைவி, பிரிவைப் பொறுத்துக் கொள்ளுதல்)

மருதம்- ஊடல்(தலைவனிடம் தலைவி பிணக்குக் கொள்ளுதல்)

நெய்தல்- இரங்கல்(தலைவி பிரிவுக் காலத்தில் வருந்துதல்)

பாலை- பிரிவு(தலைவன் தலைவியை விட்டுப் பிரிதல்)

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...