பசும்பாலைக் காய்ச்சினாலும் அதன் சுவை குறையாது; மாறாகச் சுவை கூடும்.
தங்கத்தை நெருப்பிலிட்டுச் சுட்டாலும் ஒளியோ நிறமோ கெடாது.
தேய்த்தாலும் சந்தனக் கட்டை மணம் மாறாது.
கருமை நிறம் கொண்ட அகில் கட்டையை நெருப்பில் போட்டாலும் அதில் நறுமணம் வீசும். கருகல் மணம் வீசாது.
தன்னிலை தடுமாறாத நிலை தான் மேன்மை.
அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது.
சுடினுஞ் செம்பொன் தன்னொளி கெடாது.
அரைக்கினுஞ் சந்தனந் தன்மண மறாது.
புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது.
(வெற்றிவேற்கை)
Comments
Post a Comment
Your feedback