ஙப் போல் வளை
ங அப்படியா வளைகிறது?
ஙகர வருக்கம் ஓர் அதிசயம்.
ங் என்ற மெய்யொலி ஒன்றே 12 உயிர்களுடன் சேர்ந்து உயிர்மெய் வடிவம் பெறுகிறது.
அது தன்னை ஒட்டிய பன்னிரண்டு உயிர்மெய்களையும் தமிழ் நெடுங்கணக்கில் வாழவைக்கிறது.
மங்கை
தங்கை
பழங்காலம் ....இப்படி.
அது போல் நீயும் உன் வருக்கத்தோடு இணக்கமாக வாழ்.
இந்த உலகிற்குப் பயன்பட்டு, உன் வருக்கத்தை உலகம் போற்றுமாறு செய் என்பதே ங தரும் செய்தி.
வளை என்றால் காப்பாற்று என்று பொருள்.
-தமிழண்ணல்
Comments
Post a Comment
Your feedback