நீ வருவாய் என....
பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருக்கின்றன.
நடந்து நடந்து என் கால்கள் ஓய்ந்து விட்டன.
எதிரில் வருபவர்களை எல்லாம் நீயாக இருக்குமோ என்று பார்த்துப் பார்த்து என் கண்கள் ஒளி இழந்து விட்டன.
நிச்சயமாக,
வானில் உள்ள விண்மீன்களைக் காட்டிலும் இந்த உலகத்தில், அதிகம் பேர் உள்ளனர்.
ஆனால், நான் தேடுகின்ற, அவளை மட்டும் காணவில்லை.
காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.
(குறுந்தொகை)
சொற்பொருள்:
பரி - நடை
நோக்குதல் - பார்த்தல்
வாள் - ஒளி
அகல் -அகன்ற
இரு விசும்பு - பெரிய ஆகாயம்
மீன் -விண்மீன் (நட்சத்திரம்)
மன்ற - நிச்சயமாக.
Comments
Post a Comment
Your feedback