மலைகளுக்கும் மேலே தோன்றும் நிலவு போல்
ஊருக்குள்ளேயே அவர் தான் பெரிய மனிதன்.
யானை மேல் அலங்கரிக்கும் வெண்கொற்றக்குடை போல அவரின் செல்வமும் புகழும் எங்கும் அதிகாரம் செலுத்தும்.
அப்படி இருந்தவர் இறந்துவிட்டார் என்றால் அவர் மட்டும் இந்த உலகத்தில் நிலை பெற்று வாழ்வார் என்றா நாம் நினைக்கிறோம்?
இறந்த பின் பாகுபாடும் இல்லை. இறப்பை விலக்கி வைக்கும் செல்வந்தர்களும் இல்லை.
மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்.
(நாலடியார்)
Comments
Post a Comment
Your feedback