யார் ரிமோட்?
தொலைக்காட்சி ரிமோட்டை நீங்கள் இயக்குவதாக நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ரிமோட் தான் உங்களை இயக்கிக் கொண்டிருக்கிறது.
நீங்கள் எப்போது சாப்பிட வேண்டும், எங்கு உட்காரவேண்டும், எப்போது பேச வேண்டும், என்னென்ன பார்க்க வேண்டும் என்பதை தொலைக்காட்சி தான் முடிவு செய்கிறது.
இந்தப் போதையைக் கையாள மிதமிஞ்சிய சுய கட்டுப்பாடு தேவை.
ஒரு தட்டு நிறைய முந்திரிப் பருப்பை எதிரில் வைத்துக் கொண்டு இரண்டே இரண்டு மட்டும் சாப்பிட்டு விட்டு நிறுத்த முடியுமா? அதுபோலத்தான் அளவாக டிவி பார்ப்பது.
குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களாலும் அளவாக டிவி பார்ப்பது என்பது முடியாது. அதனால் டிவியை விட்டுப் போவதும் டிவியை போடாததும் தான் தீர்வுகள்.
"டிவியில் சில நல்ல நிகழ்ச்சிகளை மட்டும் பார்ப்பேன்" என்று யாராவது உத்தரவாதம் தர முடியுமா?
எதிர்மறை எண்ணங்களை துறந்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்கள் கட்டுப்படுத்த முடியாத அந்த போதையைக் கைவிடுவதுதான் புத்திசாலித்தனம்.
டிவியை துறந்தால் எதிர்மறை எண்ணங்களின் ஒரு மிகப்பெரிய ஊற்றிலிருந்து தப்பிக்கிறீர்கள். உங்கள் உறவுகளுடன் நேரத்தை அதிகரித்துக் கொள்கிறீர்கள்.
Comments
Post a Comment
Your feedback