Skip to main content

Posts

Showing posts from July, 2024

தமிழ் திறனறி தேர்வு

தமிழ் திறனறி தேர்வு  பத்தாம் வகுப்பு  இயல்  1 எண்1      எண்2     எண்3    எண்4    எண்5 எண்6    எண்7     எண்8    எண்9    எண்10 எண்11    எண்12 இயல்  2 எண்1     எண்2     எண்3      எண்4     எண்5 எண்6   எண7    எண்8      எண்9 இயல்  3 எண்1     எண்2    எண்3    எண்4    எண்5   இயல்  4 எண் 1       எண் 2    எண் 3    எண் 4    இயல்  5 எண் 1    எண் 2    எண் 3    எண் 4    எண் 5    எண் 6    எண் 7   இயல்  6 எண் 1    எண்  2    எண்  3    எண்  4    எண்  5 இயல்  7 எண்1     எண் 2      எண்3    எண்4     எண்5  எண்6   ...

ஆகஸ்ட் 29

  ஆகஸ்ட் 29, 1831 மைக்கேல் பாரடே இன்று மின் காந்தத் தூண்டலை (Electromagnetic induction) கண்டுபிடித்தார். ஆகஸ்ட் 29, 1994 பிரபல தொழிலதிபர் லட்சுமி நாராயண பிர்லா லண்டனில் காலமானார்.

ஆகஸ்ட் 4

ஆகஸ்ட் 4 ,1972  சிம்லா ஒப்பந்தம் இன்று நடைமுறைக்கு வந்தது.. ஆகஸ்ட் 4 ,1950  ஆன்மீகவாதியான   புதுச்சேரி முதலமைச்சர் ந.ரங்கசாமி இன்று தான் பிறந்தார்.  ஆகஸ்ட் 4 ,1961 அமெரிக்காவின் அதிபராக இருந்த பராக் ஒபாமாஇன்று பிறந்தார். 

காதல் என்பது சென்டிமீட்டரா மில்லிமீட்டரா?

  இந்தப் பெண்ணுக்கு அவள் காதலை அளக்க ஒரு அடிக்கோலும் கிடைக்கவில்லை.  அது மட்டுமல்ல; காதல் என்பது முகத்தலளவையா நீட்டலளவையா என்பதிலும் குழப்பம். காதல் என்பது 2D யா 3D வடிவமா என்பதும் புரியவில்லை.  எது எப்படியோ தன் காதல் ஆழ அகலங்களில் ஒப்பிடமுடியாதது என்று நினைக்கிறாள். அதனால் தான் இப்படிச் சொல்கிறாள். நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆர் அளவின்றே – சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. (குறுந்தொகை) அதாவது, தன் காதல் நிலத்தைவிட அகலமானது, வானத்தைவிட உயரமானது, கடலைவிட ஆழமானது என்பதே அவள் சொல்லும் பொருளாகும். 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த அந்தக் கேள்வி போலவே ஒன்று இது. How do I love thee? Let me count the ways. I love thee to the depth and breadth and height My soul can reach, when feeling out of sight. -Elizabeth Barrett Browning  தனது உள்ளம் எவ்வளவு உயரம், எவ்வளவு ஆழம், எவ்வளவு அகலம் செல்லுமோ அவ்வளவு அளவு காதல் என்று கூறுகிறாள் இந்தப் பெண். தன் காதலைப் பற்றிய பெருமை, வியப்பில் காதலின் நீள அகல உயரத்தை அளக்க முயன்...

What are eating disorders?

  Pica Eating non-edible things like paper, wood, charcoal, paint, cloth, mud, chalk, pencil lead, raw grains etc. is called pica . It is seen in the children who are emotionally disturbed.  It is also seen in pregnant women. Anorexia Nervosa: It is a strong desire to lose weight.  Thus, the person eats very less and becomes thinner and thinner.  The person may induce vomiting or take purgatives frequently. He / she may suffer from sever malnutrition and disorders arising out of this.  The person is usually depressed.   Bulimia: It is an intense urge to eat more.  The person keeps eating and puts on weight. These individuals have to be treated by medicines and counselling. Behaviour therapy is also in use. Dr.C.R.Chandrashekar

எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கிறோமா?

 உண்மையில் நாம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.  நம் உடல் 24 மணி நேரமும் ஒரே மாதிரியாக இயங்குவதில்லை.  கடிகாரமும் காலண்டரும் வருவதற்கு முன்பு மனித உடலை வைத்துத்தான் சமாளித்துக் கொண்டிருந்தோம்.  சூரியன் உதிப்பதையும் மறைவதையும் கூட நம் உடம்பு தன் மொழியில் 'இப்போது எப்படி இருக்க வேண்டும்' என்று புரிந்து கொள்கிறது. மூன்று வேளை பசிக்கிறது; இரவானால் தூக்கம் வருகிறது. இதெல்லாம் வெளிப்படையாகத் தெரிபவை.  நம் தசைகள் அவ்வப்போது இறுகி சுருங்குவதும் பின்பு தானாக தளர்த்திக் கொள்வதும் என மாறிக் கொண்டிருக்கின்றன.  ஒரே வேலையைச் செய்யும் போது தனக்கு சலிப்பு வராமல் (bore அடிக்காமல்) பார்த்துக் கொள்ளும் நம் உடலின் இந்த விந்தையை சர்கேடியன் ரிதம் ( Circadian Rhythm)   என்று சொல்லுகிறார்கள்.  நம் உடலுக்குக் கிடைக்கின்ற வெளிச்சம், வெப்பம் இவற்றைப் பொறுத்து இந்த சுழற்சி நடைபெறுகிறதாம்.  சித்திரை மாத மத்தியான உச்சி வெயிலில் யாருக்கும் காதல் உணர்வு பொங்கி வருவதில்லை. என்ன காரணம்? வெயில் இல்லாத மலைப்பிரதேசமாகப் பார்த்து தேனிலவு போவதற்கு என்ன காரணமோ அதே காரணம்...

இந்த நாக்கு மட்டும்...

ஒருவர் செய்த நல்ல செயலை நேராக அவர் கண்ணைப் பார்த்து நல்லபடியாகக் கூற நமக்கு நாக்கு தடுமாறுகிறது.  சரியான வார்த்தைகள் கிடைக்காமல் ஏதோ பாராட்டுகிறோம். ஆனால் அவர் ஏதாவது ஒரு செயலைச் சரியாகச் செய்யவில்லை என்றால் அதைச் சுட்டிக்காட்டும் போது இலக்கண சுத்தமாக அறிவுரை சொல்ல முடிகிறது. இந்த நாக்குக்கு மட்டும் இந்த கெட்ட குணம் எப்படி வந்ததோ! கணமலை நன்னாட! கண்ணின்று ஒருவர் குணனேயும் கூறற்கு அரிதால் - குணன் அழுங்கக் குற்றம் உழைநின்று கூறும் சிறியவர்கட்கு எற்றால் இயன்றதோ நா. (நாலடியார்)

முன்னம் அவனுடைய நாமம்

  சிவகாமியின் சபதம் நாவல் படித்தவர்கள் மனதில் இந்தப் பாடல்  ஆழமாகப் பதிந்திருக்கும். சிவகாமி தன் வாழ்க்கையில் கடைசியாக நடனம் ஆடியது இந்தப் பாடலுக்குத் தான். இது ஒரு தேவாரப் பாடல். கடவுளையே காதலனாக நினைத்து அவனுக்காக தன் வாழ்க்கையைத் துறக்கும் ஒரு பெண் பாடுவதாக அமைந்த பாடல் இது.  இந்தப் பாடல் கதையோடு பொருந்திப் போய் விடுவதும் படிப்பவர்கள் மனதில் பதிந்து விட ஒரு முக்கியமான காரணம்.  முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர்கேட்டாள் பெம்மான் அவனுக்கே பிச்சியானாள் அன்னையையும் அத்தனையும் அன்றேநீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத் தன்னை மறந்தாள்தன் நாமங்கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன்தாளே! (தேவாரம்)  அவனை அவளுக்குத் தெரியாது.  முதலில் அவன் பெயரைத் தான் கேள்விப்படுகிறாள். சில நாள் போன பின் அவனுடைய அருமை பெருமைகளைக் கேட்டாள். அதன் பிறகு அவன் இருக்கும் இடத்தைப் பற்றிக் கேள்விப்படுகிறாள். அப்புறம் அவன் மேல் பைத்தியமாக ஆகிறாள். தன் தாய் தந்தையைக் கூட மறந்து விடுகிறாள். தான் அன்றாடம் செய்யும் வேலைகளைக் கூட ...

இரவுக்கு ஆயிரம் கண்கள்

  அறிவும் எண்ணமும் அலைபாயும். அதிலும் எண்ணங்கள் எண்ணமுடியாத அளவு விரிந்து கிடைப்பவை.  அவை நொடிக்கு நொடி மாறும்.  ஆனால் உறவினில் கொண்ட அன்பு இதயம் சார்ந்தது.  அது நிலையானது.  அதனால், இரவை அறிவாகவும் பகலை உறவாகவும்  உருவகப் படுத்துகின்றன கண்ணதாசனின் இந்த வரிகள்.   இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று கணக்கினில் கண்கள் இரண்டு அவை காட்சியில் ஒன்றே ஒன்று பெண்மையின் பார்வை ஒரு கோடி அவை பேசிடும் வார்த்தை பல கோடி அங்கும் இங்கும் அலை போலே தினம் ஆடிடும் மானிட வாழ்விலே எங்கே நடக்கும் எது நடக்கும் அது எங்கே முடியும் யாரறிவார்.                - கண்ணதாசன்  இதே அலைவரிசையில் அமைந்த  Francis William Bourdillon எழுதிய ஆங்கிலக் கவிதை இது. The night has a thousand eyes; And the day but one Yet the light of the bright world dies With the dying sun. The mind has a thousand eyes, And the heart but one. Yet the light of a whole life dies When love is done. Francis Willia...

இது தான் தீர்வா?

  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் சிறியதாகவாவது ஏதேனும் ஒரு துன்பம் வருகிறது. நமக்கு நேரும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் நாம் நம்மை தனித்தனியே பாதுகாத்துக்கொள்ள வேண்டுமா?  அல்லது ஒரே விதமான அணுகுமுறையில் எல்லாப் பிரச்னைகளையும் தீர்க்க முடியுமா?  எது சரியான முறை? யாரோடும் நாம் கோபப்படாமல் இருக்க வேண்டும். அறிவில் தெளிந்தவர்கள் யாரும் நம் மேல் கோபப்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். எல்லா நிலங்களிலும் வளரும் அருகம்புல் நெல் வயலில் வளர்வதில்லை. காரணம் நெல் முனைப்பாக வளர முயற்சிப்பதால் புல் நுழைய முடிவதில்லை. நம் வேலையில் கவனம் தான் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு. இதை விட சரியான தீர்வு எதுவுமில்லை.  உற்றதற் கெல்லாம் உரம்செய்ய வேண்டுமோ? கற்றறிந்தார் தம்மை வெகுளாமைக் காப்பமையும் நெற்செய்யப் புல்தேய்ந்தாற் போல நெடும்பகை தற்செய்யத் தானே கெடும்.   (முன்றுறை அரையனார் - பழமொழி 83)

ஜூலை 30

  ஜூலை 30,1886 மருத்துவரும் விடுதலைப் போராட்ட வீரருமான  முத்துலட்சுமி ரெட்டி  பிறந்த நாள்.   ஜூலை 30,1913 நில அதிர்வு வரைவியைக் (Seismograph) கண்டுபிடித்த ஜான் மில்னி இங்கிலாந்தில் இன்று காலமானார். ஜூலை 30,1914 தமிழறிஞர் மற்றும் உரையாசிரியர்  பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் ஆனந்த வருடம் ஆடி மாதம்  15ஆம் நாள் வியாழக்கிழமையான  இன்று  மறைந்த நாள்.  ஜூலை 30,1924 எழுத்தாளர் மா. நன்னன்   பிறந்த நாள். ஜூலை 30,1958 தமிழக எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்  பிறந்த நாள். ஜூலை 30, 2025 மருத்துவத் துறையில் இன்று ஒரு புதிய  ரத்த வகை கண்டுபிடிக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது பெண்ணுக்கு இது வரையுள்ள எந்த ரத்தவகையிலும் சேராத ஒரு புது  ரத்த வகை  அமைந்துள்ளதை இன்று மருத்துவர்கள் கண்டனர்.  இந்த வகை ரத்தத்துக்கு CRIB என்று பெயரிட்டுள்ளனர்.  CR என்பது CROMER  என்பதையும் IB  என்பது INDIA  BENGALURU  என்பதையும் குறிக்கிறது.