Skip to main content

Posts

Showing posts from July, 2023

இணை மொழிகள்

  இணை மொழிகள்   1. நேரிணைச் சொற்கள் - பொருள் , வாக்கியத்தில் இடம் பெறும் பாங்கு . i) எதுகையால் இணைதல் - அக்கம் பக்கம் ii) மோனையால் இணைதல் - அண்டை இயல் , மொய் முறை iii) பிறவகையால் இணைதல் - இழுபறி அக்குவேர் ஆணி வேர் , அக்குவேறு ஆணிவேறு . அடக்க ஒடுக்கம் , அடுத்தும் கொடுத்தும் , அடுப்பும் துடுப்பும் , அண்டாகுண்டா , அந்தி சந்தி ,   அருமை பெருமை , அரை குறை , அல்லுச்சில்லு , அலுப்பும் சலிப்பும் , அழுது அரற்றுதல் , அறிகுறி , ஆட்டம் பாட்டம் , இடக்குமுடக்கு , இதம்பதம் , இலைதழை , ஈடு இணை , ஈரம் சாரம் , ஈவு இரக்கம் ,   உப்புச்சப்பு , உருட்டுப்புரட்டு , உள்ளது உரியது , உளறுதல் குழறுதல் , உற்றார் உறவினர் , எடுப்பும் தொடுப்பும் ,         எதிரும் புதிரும் , ஏங்கல் தாங்கல் , ஏச்சுப்பேச்சு ( எச்சுப் பேச்சு ),      ஏட்டிக்குப்போட்டி , ஏமம் சாமம் ,            ...

ரங்கன் வெங்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.

  ரங்கன் வெங்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார். இது சரியான வாக்கியமா?  இது பிழையான வாக்கியம்.     எங்கே உள்ளது பிழை? பிழை 1: முதலில் ' ரங்கன் ' என்ற பெயர். அதை அரங்கன் என்றே எழுத வேண்டும். ' ரங்கசாமி ' என்பதை எப்படி ' அரங்கசாமி ' என தமிழ் வழக்குப் படி எழுதுகிறோமோ அது போலத் தான் இதுவும். ஏனெனில் ர மொழிக்கு முதலில் வராது.  பிழை 2: வெங்கலப் பாத்திரக்கடை என்பது பேச்சு வழக்கு. அதை எழுதும்போது சிதைவின்றி எழுதவேண்டும். 'வெண்கலப் பாத்திரக்கடை ' என்பது சரியானது.  பிழை 3: இது தான் கொஞ்சம் நுட்பமானது. ' வைத்திருக்கிறார் ' என்பது தவறு. அரங்கன் என்பது ஒருவனைத் தானே குறிக்கும். இலக்கணப்படி அவர், இவர் என்பதெல்லாம் பன்மையைத் தான் குறிக்கும்.  ஆனால் அவன், இவன் என்று சொல்லும்போது மரியாதையில்லாமல் சொல்வதுபோல இருக்கிறதே. என்ன செய்ய? தனி ஒருவனை ஒரு மரியாதைக்காக அவர்,இவர் என்று சொல்லவிரும்பினால் இலக்கணப் படி அது தவறு என்றாலும் அது சரி என்றே கொள்ளப்படும். ஆனால் அதற்கும் ஒரு முறை இருக்கிறது.  ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவ...

மூடித்திறந்த இமையிரண்டும்-தற்குறிப்பேற்ற அணி

     இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின்மீது கவிஞர் தனது குறிப்பை ஏற்றிச் சொல்வது  தற்குறிப்பேற்ற அணி எனப்படும். அசையும் பொருட்கள் அசையாப் பொருட்கள் இவற்றின் இயல்பான செயலின் மீது புலவர் தன் குறிப்பை ஏற்றிப் பாடுவது தற்குறிப்பேற்ற அணி என்கிறது தண்டியலங்காரம். " பெயர்பொருள் அல்பொருள் என இருபொருளினும் இயல்பின் விளைதிறன் அன்றி அயல் ஒன்று தான் குறித்து ஏற்றுதல் தற்குறிப் பேற்றம்"                                          - தண்டியலங்காரம் .   மூடித்திறந்த இமையிரண்டும் பார் பார் என்றன முந்தானை காற்றில் ஆடி வா வா என்றது... ஆடிக்கிடந்த கால் இரண்டும் நில் நில் என்றன ஆசை மட்டும் வாய்திறந்து சொல் சொல் என்றது. ( கண்ணதாசன் )   இமைகள் மூடித்திறப்பதும் முந்தானை காற்றிலாடுவதும் இயல்பான நிகழ்ச்சிகள். அதில் அவன் தன் குறிப்பை ஏற்றி அவை தன்னை அழைப்பதாகக் கருதிக்கொள்வதால் இது தற்குறிப்பேற்ற அணி .   அசைந்ததென்னவோ ஒரே கொடி தான். அது வரவேண...

குழந்தை குறித்த கேள்வியும் டாக்டர் பதிலும் -2

   தன்  சகோதரியின் குழந்தை  குறித்து  ஒருவர்  குழந்தை நல மருத்துவரிடம்  கேட்ட கேள்வியும் அதற்கு மருத்துவர் கூறிய விளக்கமும்.  கேள்வி :   என் சகோதரியின் மகன் எட்டாம் வகுப்பில் இருக்கிறான். அவனுக்கு படிப்பில் நாட்டமில்லை. கணினி வன்பொருள் துறையில் ஆர்வம் உண்டு. படிப்பை நிறுத்திவிட்டு இத்துறையில் வேலை செய்யப் போவதாக கூறுகிறான். அவனுக்கு கல்வியின் முக்கியத்துவம் தெரியவில்லை. பெற்றோரை மதிப்பதே இல்லை. அவன் நல்லவனாக இருந்தாலும் அதிக அடம்பிடிக்கிறான். எவருடைய ஆலோசனையையும் தவறாக எடுத்துக் கொள்கிறான். என் சகோதரி இதனால் கவலைப்படுகிறாள். கல்வியின் முக்கியத்துவத்தை அவன் அறிந்து கொள்ள நாங்கள் என்ன செய்ய வேண்டும்? டாக்டரின் பதில்:  எட்டாவது வகுப்பில் அவன் வளரும் வளரிளம் பருவத்தில் இருப்பதால் தன்னைப் பற்றிய குழப்பங்கள் அவனைப் பாதிக்கலாம். சக வயதினரின் வற்புறுத்தல் மற்றும் பலவற்றில் கவனம் சிதறுகிறது.  பெற்றோர் பழமைவாதிகள் அவர்களுக்குப் புரியாது என எண்ணுவதால் பெற்றோர் கூறுவதைக் கேட்பதில்லை. "படிப்பை நிறுத்திவிட்டு நாய்க் குட்டியைப் பார்த்து...

கவிமணியின் பாடல் திரைப்படத்தில்..

சிவாஜி கணேசன் நடித்த கள்வனின் காதலி என்ற படத்தில் ‘வெயிற்கேற்ற நிழலுண்டு     வீசும் தென்றல் காற்றுண்டு’ என்று ஒரு   பாடல். உமர் கய்யாம் பாரசீக மொழியில் எழுதிய கவிதையை தமிழில் மொழிபெயர்த்து கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை எழுதிய பாடல் இது. கவிமணி யி ன் பாடல் : வெய்யிற்கேற்ற நிழல் உண்டு வீசும் தென்றல் காற்றுண்டு கையில் கம்பன் கவி உண்டு கலசம் நிறைய அமுதுண்டு தெய்வ கீதம் பல உண்டு தெரிந்து பாட நீ உண்டு வையம் தரும் இவ் வனமன்றி வாழும் சொர்க்கம் வேறுண்டோ.   உமர் கய்யாமின் ஒரிஜினல் வரிகள்: Here with a loaf of bread beneath the bough, A flask of wine, a book of verse – and thou Beside me singing in the wilderness And wilderness is paradise now புகழ் பெற்ற நாவலாசிரியரான கல்கி கிருஷ்ணமூர்த்தி, 1937 ஆம் ஆண்டு முதல்    ஒரு  வார இதழில் தொடராக எழுதிய   கள்வனின் காதலி      என்னும் சமூகப் புதினமே  ( நாவல்) அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.     கவிமணியின் இந்தப்    பாடலை திரைப்...