பாலும்
தெளிதேனும் பாகும் பருப்பும்
இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்
கோலம் செய்துங்க கரிமுகத்து தூமணியே
நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!
- ஔவையார்
பாலும் – பாலும்
தெளிதேனும்- தெளிந்த
தேனையும்
பாகும்- சர்க்கரை கலந்த
பாகையும்
பருப்பும்- வேகவைத்த கடலை
பருப்பையும்
இவை நான்கும்
கலந்துனக்கு- இவை நான்கும் கலந்துனக்கு
நான் தருவேன்- நான்
நைவேத்தியமாக படைக்கிறேன்
கோலம் செய்- அழகு மிகுந்த
துங்க- துதிக்கை
அமைந்த
கரிமுகத்து- யானை முகம்
படைத்த
தூமணியே- தூய்மையான மணியே
நீ எனக்கு- நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா – இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழையும் அருள்வாயாக !
பாலையும், தெளிந்த தேனையும், சர்க்கரை கலந்த பாகையும், வேகவைத்த கடலை பருப்பையும் கலந்து உனக்கு நான் நைவேத்தியமாக படைக்கிறேன்.
அழகு மிகுந்த துதிக்கை அமைந்த யானை முகம் படைத்த தூய்மையான மணியே ! நீ எனக்கு இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழையும் அருள்வாயாக !

Comments
Post a Comment
Your feedback